ராஜ்பவனுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பெங்களூரு, டிசம்பர் 12-
பெங்களூரில் உள்ள கவர்னர் மாளிகையான ராஜ்பவனுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது இதனால் பெரும் பரபரப்பு பதட்டம் நிலவியது போலீசார் கவர்னர் மாளிகைக்கு விரைந்து வந்தனர் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டது கவர்னர் மாளிகையின் ஒவ்வொரு அறையாக தீவிர சோதனையை நடத்தப்பட்டது ஆனால் வெடிகுண்டுகள் எதுவும் இல்லை இது வெறும் புரட்டி என்று தெரியவந்த பிறகு போலீசார் நிம்மதி பெருமூச்சு விட்டனர் என்றாலும் இந்த வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார் இதன் நோக்கம் என்ன என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் பெங்களூர் நகரில் உள்ள சுமார் 48 பள்ளிகளின் வளாகங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மின்னஞ்சல் மிரட்டல் விடுக்கப்பட்டு பெரும் பரபரப்பு நிலவியது அப்போது நடத்தப்பட்ட சோதனையில் வெடிகுண்டுகள் எதுவும் இல்லை என்பது உறுதியானது இந்த நிலையில் நேற்று இரவு பெங்களூர்
போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு அருகே உள்ள கவர்னர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது நேற்ற இரவு 11.30 மணியளவில் ராஜ்பவனில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் வந்துள்ளது
தகவல் கிடைத்ததும் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது, உடனடியாக வெடிகுண்டு செயலிழப்பு படை அதிகாரிகள் மற்றும் நாய் படை அதிகாரிகள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். ராஜ்பவனுக்குச் சென்று சோதனையிட்ட போலீஸாருக்கு இதுவரை சந்தேகத்திற்கிடமான பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை.
நகரின் போலீஸ் ஆணையர் அலுவலகத்ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் . நேற்று இரவு அடையாளம் தெரியாதவர்கள் அளித்த இ மெயில் செய்தியில் கர்நாடக ஆளுநர் மாளிகையில் வெடி குண்டு வைத்திருப்பதாக தெரிவித்தனர். உடனே நடவடிக்கை மேற்கொண்ட போலீசார் பலத்த சோதனைகளுக்கு பின்னர் அங்கு எந்த வித வெடி மருந்துகளும் கிடைக்காத நிலையில் இது வெறும் புரளி என அறிந்துள்ளனர்.இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில் எங்களுக்கு நேற்று இரவு அடையாள தெரியாத நபர் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து ஆளுநர் மாளிகையில் வெடி குண்டு வைத்திருப்பதாக தெரிவித்தார். .
இது குறித்து நாங்கள் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்வோம். தவிர இன்றும் ஆளுநர் மாளிகையில் சோதனைகள் நடத்தப்படும்.
இதே வேளையில் கடந்த 10 நாடுகளுக்கு முன்னர் நகரின் 44 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில் இதனால் மாணவர்கள் பெற்றோர் மற்றும் பள்ளி நிர்வாகங்கள் மிரண்ட நிலையில் தற்போது இத்தகைய புதிய மிரட்டல் வந்துள்ளது. .
முன்னர் வந்துள்ள மிரட்டலின்படி பசவேஸ்வர்ணகரில் உள்ள நோபெல் மற்றும் வித்யஷில்பா ஆகிய பள்ளிகளுக்கு வெடி குண்டு மிரட்டல் வந்தது . இதில் மிரட்டல் விடுக்கப்பட்ட ஒரு பள்ளிக்கூடம் துணை முதல்வர் டி கே சிவகுமார் வீட்டின் எதிரில் உள்ளதாகும். பின்னர் இதே போல் நகரின் பல பள்ளிக்கூடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் தகவல்கள் இ மெயிலில் வந்துள்ளன .
இந்த நிலையில் பாதுகாப்பு கருதி போலீசார் அந்தந்த பள்ளிக்கூடங்களில் ஊழியர்கள் மற்றும் மாணவர்களை வெளியேற்றினர். இந்த போன் தகவல்கள் வெறும் போலி என்றாலும் போலீசார் மக்களின் நலன் கருதி தீவிர சோதனைகளில் ஈடுபட்டனர்.