ராஜ்யசபா தேர்தல் ஜனதாதளம் விப்

பெங்களூர்: ஜூன். 6 – ராஜ்யசபா தேர்தலுக்கு ம ஜ தா சார்பில் அதிகாரபூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டி குபேந்திர ரெட்டிக்கு வாக்களிக்குமாறு ம ஜ தா எம் எல் ஏக்களுக்கு விப் வெளியிடப்பட்டுள்ளது. ஜூன் பத்து அன்று விதான சௌதாவின் முதல் மாடியிலுள்ள அறை எண் 106ல் காலை ஒன்பது மணியிலிருந்து மாலை நான்கு மணிவரை ராஜ்யசபா இடங்களுக்கு தேர்தல் நடக்க உள்ளது. கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளர் டி குபேந்திர ரெட்டிக்கு எம் எல் ஏக்கள் வாக்களிக்க வேண்டும் என ம ஜ த சார்பில் வெங்கட்ராவ் நாடகௌடா விப் அளித்துள்ளார். எம் எல் ஏக்கள் கண்டிப்பாக வாக்களிப்பில் கலந்து கொண்டு கட்சியின் வேட்பாளருக்கு வக்காளிக்குமாறு விப் கொடுக்கப்பட்டுள்ளது.