ராஜ்யசபா தேர்தல் பெரும்பாலான இடங்களில் பிஜேபி வெற்றி

புதுடெல்லி, ஜூன் 11
இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் காலியாக இருக்கும் 57 மாநிலங்களவை எம்.பி. இடங்களுக்கு 10-ந்தேதி (நேற்று) தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் கமிஷன் அறிவித்தது. அதன்படி, தமிழ்நாடு, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், ஆந்திரா, மத்தியபிரதேசம், ஒடிசா, சத்தீஸ்கார், பஞ்சாப், தெலுங்கானா, ஜார்கண்ட் ஆகிய 11 மாநிலங்களில் 41 மாநிலங்களவை உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வாகினர். மீதமுள்ள கர்நாடகா, அரியானா, ராஜஸ்தான், மராட்டியம் ஆகிய 4 மாநிலங்களில் காலியாக உள்ள 16 மாநிலங்களவை எம்.பி.க்களுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. பதிவான வாக்குகள் நேற்றே எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில் 16 இடங்களில் பாஜக 8 இடங்களில் வெற்றிபெற்றது.
காங்கிரஸ் 5 இடங்களில் வெற்றிபெற்றது. மகா விகாஸ் அகாடி கூட்டணியில் உள்ள வசேனா , தேசியவாத காங்கிரஸ் தலா ஒரு இடங்களில் வெற்றிபெற்றன.
அரியானாவில் பாஜக ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர் வெற்றிபெற்றார்.