ராஜ்யசபா வாக்குப்பதிவு பரபரப்பு

பெங்களூரு, பிப். 27: மாநிலங்களவையில் காலியாக உள்ள இடங்களுக்கு இன்று தேர்தல் நடைபெற்றது. கர்நாடகத்தில்
4 இடங்களுக்கு 5 பேர் போட்டியிட்டுள்ளனர். இதனால் தேர்தல் முடிவை காண‌ ஆர்வமுடன் அனைவரும் உள்ளனர்.
மாநிலங்களவைத் தேர்தல் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தேர்தல் பெங்களூரு விதானசவுதா முதல் மாடியில் உள்ள அறை எண் 106 இல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இன்று காலை 9 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. பாஜக எம்எல்ஏ சுரேஷ்குமார் முதலில் வந்து வாக்களித்தார். அதனைத் தொடர்ந்து எம்எல்ஏக்கள் வந்து தங்கள் வாக்கை செலுத்தினர்.
மாநிலங்களவைத் தேர்தல் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவுக்கு வாய்ப்பு உள்ளது. மாலை 5 மணி பிறகு வாக்கு எண்ணிகை நடக்கவுள்ளது. இன்று இரவு முடிவு வெளியாக உள்ளது.
இந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களாக அஜய் மாகன், சையத் நாசீர் ஹுசேன் மற்றும் சந்திரசேகர் ஆகியோர் களத்தில் உள்ளனர். பாஜக வேட்பாளராக நாராயணசா பாண்டகே, மஜத மற்றும் பாஜக கூட்டணியில் குபேந்திரரெட்டி போட்டியிடுகின்றனர்.


5 வேட்பாளர்களின் போட்டியால், தேர்தல் முடிவை மாநில மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். கட்சிமாறி யாரேனும் வாக்களிப்பார்களா என்ற அச்சம் அனைத்து கட்சியினருக்கும் உள்ளது
முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவகுமார், முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை, எச்.டி. குமாரசாமி, எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.அசோக், அமைச்சர் எம்.பி.பாட்டீல், பாஜக மாநிலத் தலைவர் பி.ஒய்.விஜயேந்திர உள்ளிட்டோர் வாக்களித்தனர்.
காங்கிரஸ் கட்சி தனது எம்.எல்.ஏகளை பாதுகாக்க, நேற்று பெங்களூரு தனியார் ஹோட்டலுக்கு அழைத்து சென்றது. காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவரும் இன்று ஹோட்டலில் இருந்து பேருந்துகளில் நேரடியாக விதானசவுதாற்கு வந்து வாக்களித்தனர்.
இந்த தேர்தலில் வெற்றி பெறுவதற்கு வேட்பாளருக்கு 45 வாக்குகள் தேவை. காங்கிரஸுக்கு சட்டமன்றத்தில் உள்ள எம்எல் ஏக்களின் பலத்தில் 3 வேட்பாளர்கள் வெல்ல வாய்ப்பு உள்ளது. மேலும் பாஜக தனது ஒரு வேட்பாளரை வெற்றி பெற செய்வதற்கான வாக்குகள் உள்ளன.


பாஜகவின் கூடுதல் வாக்குகள் மற்றும் மஜதவின் வாக்குகள் உள்பட 40 வாக்குகள் 5 வேட்பாளர்களாக இருக்கும் குபேந்திரரெட்டி அவர்களுக்கு கிடைக்கும். குபேந்திரரெட்டியின் வெற்றிக்கு 5 வாக்குகள் குறைவாக‌ உள்ளது. இந்த வாக்கு பற்றாக்குறையை குபேந்திரரெட்டி எந்த முறையில் பெறுகிறார்., அவர் வெற்றி பெறுவாரா என்பது ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாநிலங்களவைத் தேர்தல் வாக்குப்பதிவுக்கு முன்பு தேர்தல் தலைமை ஆணையர் மனோஜ்குமார் மீனா, தேர்தல் அதிகாரி விசாலாட்சி அவர்கள் விதானசவுதா முதல் மாடியில் உள்ள வாக்கு அளிக்கும் அறையின் ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர்.