ராஜ்யசபா 4வது இடம் – சதுரங்க ஆட்டம்

பெங்களூர்: மே. 31 – மாநில சட்டமன்றத்திலிருந்து ராஜயசபாவிற்கு நடக்க உள்ள தேர்தலில் நான்காவது இடத்தின் மீது கண் வைத்து பா ஜ , காங்கிரஸ் மற்றும் ம ஜ தா தங்கள் வேட்பாளர்களை களத்தில் இறக்கி இருப்பது தேர்தல் முடிவுகள் குறித்து ஆர்வத்தை அதிகரித்துள்ளன . இது மட்டுமின்றி தேர்தல் களம் தற்போது சூடு பிடித்திருப்பதுடன் நான்காவது வேட்பாளராக யார் வெற்றிபெறப்போகிறார்கள் என்பது தற்போதைய சர்ச்சையாக உள்ளது. ராஜ்யசபாவில் நான்கு இடங்களுக்கு ஜூன் பத்தாம் தேதி நடக்க உள்ள தேர்தல்களில் மூன்று இடங்களில் இரண்டை பா ஜ மற்றும் ஒரு இடத்தை காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மிக எளிதாக வெற்றிபெறும். ஆனால் நான்காவது இடத்தை வெல்லும் அளவிற்கு இந்த மூன்று கட்சிகளுக்கும் பெரும்பான்மை இல்லை. ஆனாலும் மூன்று கட்சிகளும் தங்கள் தங்கள் வேட்பாளர்களை களத்தில் இறக்கி இருப்பது தேர்தலை குதூகலத்திற்கு காரணமாகியுள்ளது.
பா ஜ சார்பில் நான்காவது இடத்திற்கு லெஹர் சிங்க் , காங்கிரஸ் சார்பில் மன்சூர் அலி கான் மற்றும் ம ஜ தா வாயிலாக குபேந்திர ரெட்டி அகியோருக்கிடையே பலத்த போட்டி நிலவுகிறது. இந்த நிலையில் இவைகளில் யார் வெற்றி கனியை பறிக்கப்போகிறார்கள் எந்த கட்சி எந்த வேட்பாளருக்கு ஆதரவை தெரிவிக்கும் மற்றும் யார் உண்மையான அரசியல்நண்பர்கள் , மற்றும் யார் உண்மையான அரசியல் விரோதிகள், என பல உம்மைகள் இந்த தேர்தல் முடிவுகளின் போது தெரிய வரும். காங்கிரஸ் கட்சி நேற்று திடீரென நான்காவது இடத்திற்கு தன் இரண்டாவது வேட்பாளரை களத்தில் இறக்கி ம ஜ தா எளிதாக வெற்றி பெறுவதற்கு தடை விதிக்கும் முயற்சியில் ஈடுபட்டது .
இதே வேளையில் காங்கிரஸ் மற்றும் ம ஜ தாவுக்கிடையே உள்ள போட்டியை தங்களுக்கு சாதகமாக்கி கொள்ளும் விதத்தில் பா ஜ தன் மூன்றாவது வேட்பாளராக லெஹர் சிங்க்கை காலத்தில் இறங்கியுள்ளது. இரண்டு தேசிய கட்சிகளின் போட்டிகள் மற்றும் எதிர் போட்டிகளுக்கிடையே ம ஜ தாவின் குபேந்திர ரெட்டி எளிதில் வெற்றிபெறுவாரா பின்னர் யார் இதில் வெற்றி பெறுவார்கள் எனப்து குதூகலத்தை கிளப்பியுள்ளது. ம ஜ தாவின் குபேந்திர ரெட்டி காங்கிரசின் ஆதரவை பெற்று நான்காவது வேட்பாளராக ராஜ்யசபாவிற்குள் நுழைய முற்பட்டுள்ளார். இந்த நோக்கில் அவர் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் டி கே சிவகுமார் , மேலவையில் எதிர்க்கட்சி தலைவர் பி கே ஹரிப்ரசாத் ஆகியோரை சந்தித்து ஆலோசனைகள்நடத்தியுள்ளார். ஆனால் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவை அவர் சந்திக்க வில்லை. ம ஜ தாவும் காங்கிரசின் ஆதரவை பெற முயற்சிகள் நடத்திவருவதால் அடங்கி போன சித்தராமையா ம ஜ தாவுடன் எவ்வித உறவும் வேண்டாம். அவர்களிடம் இருந்து விலகியே இருப்போம் என மேலிடத்தின் மனதை மாற்றி காங்கிரசின் நான்காவது வேட்பாளரை களத்தில் இறக்கி ம ஜ தாவிற்கு மிரட்டல் விடுத்துள்ளார்.