ராஜ்யோத்சவா விருது பெற தகுதியானவர்களை ஆன்லைன் மூலம் பரிந்துரைக்கலாம்

பெங்களூர் செப்.25-
கர்நாடக மாநிலத்தில் ராஜ்யோத்சவா விருது பெற தகுதியானவர்களை பொதுமக்களே ஆன்லைன் மூலம் பரிந்துரை செய்யலாம் என்று கன்னடம் மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் சுனில்குமார் தெரிவித்தார்.
கர்நாடக மாநிலத்தில் இந்த ஆண்டு 66 சாதனையாளர்களுக்கு ராஜ்யோத்சவா விருது வழங்கப்படுகிறது. சிந்து போர்டல் மூலம் ராஜ்யோத்சவா விருதுகளுக்காக தயாரிக்கப்பட்ட சிறப்பு விண்ணப்பப் படிவத்தில் பெயர்களை பரிந்துரைக்கப்படலாம். கர்நாடகத்தில் எந்த மூலையில் வசிப்பவராக இருந்தாலும் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களாக இருந்தால் அவர்கள் குறித்து இந்த போர்களில் தகவல் தெரிவிக்கலாம் என்று அமைச்சர் கூறினார்