ராணி எலிசபெத் மறைவு – மோடி இரங்கல்

புதுடெல்லி: செப். 9-
இங்கிலாந்து மகாராணி எலிசெபத் (96), அங்குள்ள பக்கிங்காம் மாளிகையில் வசித்து வந்தார். ராணி எலிசபெத்துக்கு இன்று திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, பால்மோரல் அரண்மனையில் மகாராணியின் அதிகாரப்பூர்வ மருத்துவக் குழு அவருக்கு சிகிச்சை அளித்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி ராணி எலிசபெத் காலமானார். இங்கிலாந்து மகாராணியின் மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இங்கிலாந்து மகாராணியின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், இங்கிலாந்து மகாராணி நம் காலத்தின் தலைசிறந்த வீராங்கனையாக நினைவு கூரப்படுவார். அவர் தனது தேசத்திற்கும் மக்களுக்கும் ஊக்கமளிக்கும் தலைமையை வழங்கினார். பொது வாழ்வில் கண்ணியத்தை வெளிப்படுத்தினார் என பதிவிட்டுள்ளார்.