ராணுவ வீரரை தாக்கி, முதுகில் பி.எப்.ஐ. என எழுதி சென்ற மர்ம நபர்கள்

கொல்லம், செப்டம்பர் . 26 -கேரளாவின் கொல்லம் பகுதியை சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் விடுமுறையில் சொந்த ஊருக்கு சென்றுள்ளார். இந்த நிலையில், அவரை மர்ம கும்பல் ஒன்று கடுமையாக தாக்கி உள்ளது. இதுபற்றி அவர் உள்ளூர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
இதுபற்றி இந்திய ராணுவம் வெளியிட்டு உள்ள அறிக்கை ஒன்றில், 5 முதல் 6 பேர் கொண்ட மர்ம நபர்கள் சிலர், கொல்லம் நகரை சேர்ந்த ராணுவ வீரரை, விடுமுறையில் ஊருக்கு வந்தபோது கடுமையாக தாக்கியுள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு பின்பு அவருடைய முதுகு பகுதியில் பி.எப்.ஐ. என மர்ம நபர்கள் எழுதியுள்ளனர் என தெரிவித்து உள்ளது.
இந்த விவகாரத்தில், உள்ளூர் போலீசாரின் விசாரணை மற்றும் தொடர் நடவடிக்கைகளை பற்றி இந்திய ராணுவமும் தொடர்ந்து கேட்டு வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து போலீசாரின் தீவிர விசாரணை நடந்து வருகிறது.