ராமர் கோயில் திறப்பு விழாவில் சோனியா பங்கேற்க வாய்ப்பு

புதுடெல்லி: டிச. 30:
காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் நேற்று கூறியதாவது: அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேக விழா ஜனவரி 22-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த விழாவில் பங்கேற்க மூத்த தலைவர் சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை
தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பை ஏற்று விழாவில் சோனியா பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுத் தேர்தலுக்கு இன்னும் நான்கு மாதங்களே உள்ள நிலையில் ராமர் கோயில் திறப்பு விழாவை, காங்கிரஸ் புறக்கணித்தால் கட்சிக்கும், இண்டியா கூட்டணிக்கும் பாதகமாக அமையும் வாய்ப்புகள் அதிகம். அதை தவிர்க்க, ராமர் கோயில் திறப்பு விழாவில் சோனியா பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு காங் கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.