ராமர் கோவிலுக்கு சட்டென குறைந்த கூட்டம்

லக்னோ, ஜூன் 12-லோக்சபா தேர்தலில் பைசாபாத்தில் பாஜக தோல்வி அடைந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக அயோத்தி ராமர் கோவிலுக்கு செல்லும் மக்கள் கூட்டம் வெகுவாக குறைந்து உள்ளதாம்.
2024 லோக்சபா தேர்தலில் தனிப்பட்ட வகையில் பாஜக படுதோல்வி அடைந்து உள்ளது. என்டிஏ கூட்டணி ஆட்சி அமைந்து இருந்தாலும் பாஜக தனிப்பட்ட வகையில் மெஜாரிட்டியை இழந்து உள்ளது.543 தொகுதிகள் நாட்டில் உள்ளன. இதில் 272 தொகுதிகளில் வென்றால் ஆட்சியை பிடிக்க முடியும். இப்படிப்பட்ட நிலையில் 2024 லோக்சபா தேர்தலில் கிட்டத்தட்ட 292 தொகுதிகளில் என்டிஏ கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. பாஜக தனியாக 240 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 97 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா கூட்டணி 229 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதனால் 40 இடங்களை வைத்து இருக்கும் சந்திர பாபு நாயுடு, நிதிஷ் குமார், ஷிண்டே சிவசேனா ஆகியோரின் உதவிதான் மோடி ஆட்சி அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது Advertisement தற்போது கூட்டணிகள் உதவியுடன் பாஜக அமைச்சரவை அமைத்து ஆட்சி அமைத்துள்ளது. அயோத்தியிலேயே தோல்வி: முக்கியமாக உத்தர பிரதேசத்தில் அயோத்தி கோவில் கட்டப்பட்ட பைசாபாத் தொகுதியிலேயே பாஜக தோல்வி அடைந்து உள்ளது. உத்தர பிரதேசத்தில் மொத்தம் 80 தொகுதிகள் உள்ளன. இதில் 2019 லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணி 71 இடங்களில் வென்றது. பகுஜன் சமாஜ் 2019 தேர்தலில் போட்டியிடவில்லை. சமாஜ்வாதி 5 இடங்களில் வென்றது. காங்கிரஸ் வெறும் 2 இடங்களில் வென்றது. 2024 லோக்சபா தேர்தல்: 2024 இந்தியப் பொதுத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் 80 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை அனைத்து ஏழு கட்டங்களில் நடந்தது.அங்கே பாஜக, அப்னா தளம், லோக் தளம் போன்ற கட்சிகள் கூட்டணி வைத்தன. எதிரே காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமூல் காங்கிரஸ் ஆகியவை கூட்டணி வைத்தன. பகுஜன் சமாஜ் தனியாக போட்டியிட்டது. தோல்வி அடைந்தது; உத்தர பிரதேசத்தில் மாபெரும் அரசியல் திருப்பம் ஏற்பட்டு உள்ளது. அங்கே பாஜகவை முந்திய இந்தியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸின் இந்தியா கூட்டணி 43 இடங்களில் வெற்றி பெற்று அசத்தி உள்ளது. பாஜக கூட்டணி 33 இடங்களுக்கு சென்று உள்ளது. அங்கே மிக மோசமான தோல்வியை பாஜக பெற்றுள்ளது. தோல்வி; இந்தியா இங்கே மிக அதிக அளவில் வாக்குகளை பெற்று உள்ளன. இப்படிப்பட்ட நிலையில் உத்தர பிரதேசத்தில் அயோத்தி கோவில் கட்டப்பட்ட பைசாபாத் தொகுதியிலேயே பாஜக தோல்வி அடைந்து உள்ளது. சமாஜ்வாதி வேட்பாளர் ஆவதேஷ் பிரசாத் 554289 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். லல்லு சிங் பாஜக சார்பாக 499722 வாக்குகள் பெற்றுள்ளார். பாஜக 54567 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து உள்ளார். வருகை இல்லை: லோக்சபா தேர்தலில் பைசாபாத்தில் பாஜக தோல்வி அடைந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக அயோத்தி ராமர் கோவிலுக்கு செல்லும் மக்கள் கூட்டம் வெகுவாக குறைந்து உள்ளதாம். ஏற்கனவே இங்கே கூட்டம் குறைவால் விமான சேவைகள் வெகுவாக குறைக்கப்பட்டன. கடந்த 1 வாரமாக இங்கே பாஜகவினர் வருகையும் குறைந்துவிட்டது. இதனால் பக்தர்கள் எண்ணிக்கை 30 சதவிகிதத்திற்கும் மேல் சரிந்துவிட்டதாக கூறப்படுகிறது.