ராமர் கோவில் கருவறைக்கு தங்க வாசல்

அயோத்யா : ஜனவரி 10 – வரும் 22 அன்று நாட்டுக்கு அர்பணிக்கவுள்ள அயோத்யா ராமர் கோயிலில் முதல் தங்க வாசல் பொறுத்தப்பட்டுள்ளது . இந்த கோயில் முழுக்க அமைய உள்ள 46வாசல்களில் 42 வாசல்கள் தங்க முலாம் பூசப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது . ராமர் கோயில் திறக்கும் நாள் நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில் ராம் பக்தர்கள் அந்த நாளுக்காக பூரிப்புடன் காத்திருக்கும் நிலையில் கோயிலின் பிரதான வாயிலில் 12 அடி உயரம் மற்றும் 8 அடி அகலம் கொண்ட தங்க கதவு கோயிலின் முதல் மாடியில் கர்பகிரஹம் அருகில் நிறுவப்பட்டது. இந்த கோயிலில் மொத்தம் 46 வாயில்கள் அமைக்கப்பட உள்ளன. அதில் 42 வாயில்கள் தங்க முலாம் பூசப்பட்ட உள்ளன. உத்தரபிரதேச முதல்வர் அலுவலக தகவல்களின்படி அடுத்த மூன்று நாட்களில் மேலும் 13 தங்க வாயில்கள் பொருத்தப்பட உள்ளன.அயோத்தியாவில் வரும் 22 அன்று நிறுவப்படவுள்ள ராமர் சிலை நிகழ்ச்சிக்கு ஏற்கெனவே ஆயிரத்திற்கும் மேற்பட்ட முக்கிய புள்ளிகளுக்கு அழைப்புகள் அனுப்பப்பட்டுள்ளது. தவிர ராமர் கோயில் திறப்பு விழா தொடர்பாக உத்தரபிரதேச மாநிலம் முழுக்க வரும் 22 அன்று அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது . தவிர மாநிலம் முழுக்க அன்று மது பான கடைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது . நிகழ்ச்சி ஏற்பாடுகளை மாநில முதல்வர் ஆதித்ய நாத் நேரில் கண்காணித்து வரும் நிலையில் வரும் 14 முதல் அயோத்யா முழுக்க சுத்திகரிப்பு பணியில் ஈடுபடுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். தற்போதைய நிகழிச்சியின்படி வரும் 22 அன்று பிரதமர் நரேந்திரமோதி , ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகத் , முதல்வர் ஆதித்திய நாத் ஆகியோர் முன்னிலையில் ராமர் சிலை நிறுவப்பட உள்ளது . தவிர மேலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முக்கிய பிரமுகர்கள் இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சியில் பங்கு கொள்ள உள்ளனர். ஆனாலும் எதிர்க்கட்சிகள் பி ஜே பி அடுத்துவரும் பாராளுமன்ற தேர்தலுக்கு ராமர் கோயில் திறப்பு விழாவை சாதமாக்கியுள்ளதாக எதிர்ப்புகள் தெரிவித்துள்ளன.