ராமர் கோவில் திறப்பு அன்று குழந்தை பெற்றெடுக்க விரும்பிய பெண்கள்

பெங்களூர்/ ஹூப்ளி : ஜனவரி. 27 – கடந்த ஜனவரி 22 அன்று அயோத்யாவில் ராமர் கோயில் திறக்கப்பட்ட நிலையில் அந்நாளிலே தங்களுக்கு பிரசவம் ஆக வேண்டும் என எதிர்பார்த்ர்த்த கர்ப்பிணிகளின் எண்ணிக்கை மாநிலத்தில் அதிகமாய் இருந்துள்ளது. அந்த நாளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ‘மரியாத புருஷோத்தம ‘ போன்ற நல்ல பலன்கள் மற்றும் சுப சம்பவங்கள் நடக்கும் என்ற நோக்கத்தில் பல கர்பிணிகள் சிசேரியன் அறுவை சிகிச்சை வாயிலாக குழந்ததை ஈன்று அந்த குழந்தைக்கு ராமர் என பெயர் சூட்டவும் தாயாராயிருந்துள்ளனர். இது குறித்து அங்கிதா என்ற கர்ப்பிணி கூறுகையியில் இது ஒரு வரப்பிரசாதம் . என்னுடைய ரத்த அழுத்த்ஹில் மாறுதல்கள் இருந்ததால் நான் மருத்துவரிடம் ஜனவரி 22 பிற்பகல் எனக்கு அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுக்குமாறு கேட்டுக்கொண்டேன். என்றார். இதே வேளையில் அவருடைய கணவன் ஷிவ் அகர்வால் மற்றும் அவருடைய குடும்பத்தினர் ராமர் கோயில் திறக்கப்பட்ட நேரத்தில் குழந்தை பிறந்ததற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர் . இதே போல் தங்களின் ஒன்பது கர்ப்பிணிகள் ராமர் கோயில் திறக்கப்பட்ட நேரத்தில் தங்களுக்கு பிரசவம் செய்யமாறு வலியுறியுறுத்தியதாக நகரின் தனியார் மருத்துவமனை முனைவர் கானா ஸ்ரீனிவாஸ் தெரிவித்தார். இது போன்ற கோரிக்கைகளுக்கு நாங்கள் செவி மடுத்தாலும் குறை பிரசவங்களுக்கு ஒப்புக்கொள்ளமாட்டோம். சுப தினம் என்ற காரணத்திற்க்காக குறை குழந்தையை பிரசவம் பார்த்து அதை நீண்ட நாட்கள் சோதனை பெட்டியில் வைத்திருக்க முடியாது. 37 வாரங்கள் கர்ப்பம் நிறைவுற்று குழந்தை நல்ல வளர்ச்சியடைந்த பின்னரே நாங்கள் சிசேரியன் அறுவை சிகிச்சை மேற்கொள்வோம். என்றார். இதே போல் ஹூப்ளியில் கீதா என்பவருக்கு வியாழகிழமை பிரசவ வலி வந்த போதிலும் அவர் தனக்கு ஜனவரி 22 அன்று தான் குழந்தை பிறக்க வேண்டும் என வற்புறுத்தினார். இதே போல் நகரிலும் பல கர்ப்பிணிகள் தங்களுக்கு பிரசவ தேதி முன்னராக இருந்திருப்பினும் அல்லது பின்னராக இருந்திருப்பினும் ராமர் கோயில் திறப்பு தினமான ஜனவரி 22 அன்றே தங்களுக்கு பிரசவம் ஆக வேண்டும் என மருத்துவர்களை வற்புறுத்தியுள்ளனர் . ஆனாலும் குழந்தைகள் பிறப்பது என்பது இயற்கையான நடவடிக்கை என்பதால் பல மருத்துவர்கள் இது போன்ற கோரிக்கைகளுக்கு செவிமடுப்பதில்லை.