ராமர் சிலை நிறுவப்படும்

லக்னோ, ஜன.7-
அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் அடுத்த ஆண்டு (2024) ஜனவரி 1-ந்தேதிக்குள் தயாராகி விடும் என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று முன்தினம் கூறியிருந்தார்.இந்தநிலையில், ராமஜென்மபூமி அறக்கட்டளை பொதுச்செயலாளர் சம்பத் ராய் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:- ராமர் கோவில் கட்டுமான பணி உரிய நேரத்தில் முடிவடையும். வருகிற டிசம்பர் மாதம் பணியை முடித்துவிட்டு, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் கோவிலை திறக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். அடுத்த ஆண்டு ஜனவரி 14-ந்தேதி மகர சங்கராந்தியன்று கோவில் கருவறையில் ராமர் சிலை நிறுவப்படும். அதைத்தொடர்ந்து கோவில் திறக்கப்படும். டிசம்பர் மாதமே கோவில் திறப்பு கொண்டாட்டங்கள் தொடங்கி விடும். இவ்வாறு அவர் கூறினார்.