ராயக்கோட்டை அருகே நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்த 7 பேர் கைது

ராயக்கோட்டை, ஜூலை.21-
ராயக்கோட்டை அருகே நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்த 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
ராயக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, கெலமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்தீபன் மற்றும் போலீசார் கெலமங்கலம் போலீஸ் நிலைய எல்லைக்குட்ட பகுதியில் நேற்று தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது வனவிலங்குகளை வேட்டையாட உரிமம் இல்லாத நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்த காடுலக்கசந்திரத்தை சேர்ந்த மாரப்பா (வயது 45), பேவநத்தம் திம்மராயன்(42), இருளப்பட்டி நாகராஜ் (37), லட்சுமிபுரம் கிருஷ்ணன் (47), உப்புபள்ளம் முரளி (25), சங்கரப்பா (60), யூபுரம் திம்மராயப்பா (50) ஆகிய 7 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்களுக்கு வெடிமருந்துகளை சப்ளை செய்த கெலமங்கலத்தை சேர்ந்த சீனிவாசன் (45), என்பவரும் கைது செய்யப்பட்டார். அவர்களிடம் இருந்து 7 நாட்டுத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.