ரா அதிகாரியாக நடித்து மோசடி : செவிலியர் மாணவர் கைது

மங்களூர் : ஆகஸ்ட். 21 – போலீஸ் மற்றும் ரா அதிகாரி என சொல்லிக்கொண்டு மோசடிகள் செய்து வந்த தனியார் செவிலியர் கல்லூரி மாணவர் ஒருவனை நகர போலீசார் கைது செய்துள்ளனர். கேரளா மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த குற்றவாளி பெனடிக்ஸ் சாபு என்பவன் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளியாவான். கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் ஜி என் எம் படிப்பு படிக்க சேர்ந்த குற்றவாளி கேரளாவின் விவசாய அதிகாரி என்று கல்லூரி முதல்வரிடம் அறிமுகமாகி பின்னர் சப் இன்ஸ்பெக்டர் மற்றும் ரா அதிகாரி என சொல்லிக்கொண்டு திரிந்ததுடன் கல்லூரியில் போதை தடுப்பு நிகழ்ச்சிகளின் போது பெனெடிக்ஸ் சாபுவின் அசல் முகம் தெரிய வந்துள்ளது. கல்லூரியில் போலீஸ் இலாகா வாயிலாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதி பொருள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் போது இவனுடைய நடவடிக்கை பொலிஸாருக்கு சந்தேகத்தை கிளப்பியுள்ளது. நிகழ்ச்சி முடிந்த பின்னர் இவனை தங்கள் வசம் அழைத்து விசாரித்தபோது உண்மையை கக்கி உள்ளான். போலிஸாரிடமும் தான் ஒரு ரா அதிகாரி என தெரிவித்துள்ளான். தவிர போலீஸ் சீருடையையும் அணிந்துள்ளான். இதனால் சந்தேகமடைந்த உர்வா போலீசார் இவனை தங்கள் வசம் எடுத்து விசாரணை நடத்தியபோது இவனுடைய சாயம் வெளுத்துள்ளது . இவனிடமிருந்து போலீசார் போலி அடையாள அட்டைகள் , போலீஸ் சீருடைகள் மொபைல் போன்கல் , மற்றும் மடிக்கணனி ஆகியவற்றை கைப்பற்றியுள்ளனர்.