ருசியான பீட்ரூட் லட்டு


சாமான்ய லட்டு செய்யும் முறை பலருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் லட்டை ஒரே ருசியில் உண்பதற்கு பதிலாக சற்றே வித்யாசமான விதத்தில் ருசியான லட்டு உண்ண வேண்டுமென்றால் பீட்ரூட் லட்டு செய்துகொள்ளலாம். இந்த லட்டை மிகவும் சுலபமாக செய்யலாம்.
தேவையான பொருட்கள்:
பீட் ரூட் – இரண்டு கிண்ணங்கள்
உலர்ந்த கொப்பரை துருவல் – ஒரு கிண்ணம்
சர்க்கரை – ஒரு கிண்ணம்
நெய் – மூன்று ஸ்பூன்
ஏலக்காய் பொடி – கால் ஸ்பூன்
பாதாம் – பத்து
திராட்சை மற்றும் முந்திரி – சிறிதளவு
செய்யும் முறை- ஒரு வாணலியில் நெய் ஊற்றி சூடாக்கவும். அதில் ஏலக்காய் பொடியை போடவும். பின்னர் துருவிய பீட்ரூட் போட்டு சிறிய தீயில் பத்து நிமிடங்கள் வறுக்கவும். பின்னர் அதில் சர்க்கரை போட்டு கலக்கவும். அது கெட்டியாகும் வரை கலந்து கொண்டே இருக்கவும். இது அடி பிடிக்காமல் பார்த்து கொள்ளவும். இந்த கலவை உருண்டை செய்யும் அளவிற்கு வந்த பின்னர் அதை வேறொரு தட்டில் போட்டு கொள்ளவும். பின்னர் இது சூடாய் இருக்கும் போதே பொடி செய்த பாதாம் மற்றும் திராட்சையை போட்டு கலக்கவும். கைகளுக்கு சிறிது நெய் தேய்த்து கொண்டு லட்டு போல் உருண்டைகள் செய்யவும். இப்போது புது வித பீட் ரூட் லட்டு உங்கள் கையில்.
ஆலோசனை: இதையே கலவை சூடாக இருக்கும் போது நெய் தடவிய பாத்திரத்தில் போட்டு மேலே முந்திரி மற்றும் திராட்சை போட்டு அது சூடு ஆரிய பின்னர் சதுர வடிவங்களில் கத்தியால் வெட்டினால் பீட் ரூட் சாக்லேட் ஆகிவிடும்.