ரூ.பல கோடி தங்கம் வெள்ளிநகைகளுடன் நகை கடை ஊழியர்கள் ஓட்டம்

பெங்களுர் : நவம்பர். 17 – எஜமானின் அறையில் இருந்து திருடிய சாவிகள் கொண்டு சூழ்ச்சி செய்து நகை கடைக்குள் நுழைந்த பணியாளர்கள் 4 கிலோ தங்கம் , 34 கிலோ வெள்ளி மற்றும் 9 லட்ச ரொக்கத்தை கொள்ளையடித்து தப்பியோடியுள்ள சம்பவம் ஹல்சூர் கேட் பகுதியில் நடந்திருப்பது தாமதமாக தெரிய வந்துள்ளது. கடநத அக்டோபர் மாதம் 29 அன்று அரவிந்த் குமார் என்பவருக்கு சொதமான அல்சூர் கேட் அருகில் உள்ள நகை கடையில் நடந்துள்ள இந்த திருட்டு குறித்து விசாரணியைதீவிரப்படுத்தியுள்ள போலீசார் நண்பனுடன் சேர்ந்து இந்த கொள்ளையில் ஈடுபட்டு தற்போது தலைமறைவாயுள்ள கடையின் ஊழியன் ராஜஸ்தானை சேர்ந்த கேதராம் என்பவனை தீவிரமாக தேடி வருகின்றனர். அரவிந்த் குமாரின் வீடு பணியாளனாக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் தான் ராஜஸ்தானை சேர்ந்த கேதராம் பணியில் சேர்ந்திருந்தான் . தன்னுடைய எஜமானனிடம் நல்லவன் போல் நடித்து வந்த கேதராம் இவர்களின் பொருளாதார நிலைமைகள் குறித்து முழுதுமாக தெரிந்து வைத்துள்ளான். அரவிந்த் குமார் மும்பைக்கு செல்லும்போது அவருடைய பையில் இருந்த சாவியை கேதராம் திருடியுள்ளான். பின்னர் தன் சொந்த ஊரை சேர்ந்த ராகேஷ் என்பவனை அழைத்து நகைக்கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். பின்னர் கடைக்குள் இருந்த 4 கிலோ தங்கம் , 34 கிலோவெள்ளி மற்றும் 9 லட்ச ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை அபகரித்து கொண்டு தப்பியோடியுள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்துகொண்டுள்ள அல்சூர் கேட் போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.