ரூ.1 கோடி கேட்டு ஆர்எஸ் பாரதி மீதுஅண்ணாமலை மானநஷ்ட வழக்கு

சென்னை: ஜூலை.10-திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதிக்கு எதிராக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்துக்கு சென்று ரூ.1 கோடி கேட்டு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார்.
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கடந்த மாதம் கள்ளச்சாராயம் குடித்து 200க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டனர். இதில் தற்போது வரை 66 பேர் வரை பலியாகி உள்ளனர். மற்றவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர். இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.இதுதொடர்பாக 15க்கும் அதிகமானவர்களை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசின் அலட்சியமே கள்ளச்சாராய பலிக்கு காரணம் எனக்கூறி முதல்வர் ஸ்டாலினை எதிர்க்கட்சி தலைவர்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர்.
அதோடு அவர்த முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று அதிமுக, பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதற்கு திமுக தலைவர்களும் பதிலடி கொடுத்தனர்.