ரூ.1.30 கோடி பறிமுதல்

விசாகப்பட்டினம்அக்டோபர் . 26 – : விசாகப்பட்டினத்தில் இருந்து விஜயவாடாவுக்கு ஒரு வாஷிங்மிஷனை ஆட்டோவில் சிலர் கொண்டு சென்றனர். அதில் பணம் கடத்தி செல்வதாக விசாகப்பட்டினம் போலீஸாருக்கு நேற்று ரகசிய தகவல் வந்தது.
அதன் பேரில் விமான நிலையம் அருகே போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வந்த ஆட்டோவில் சோதனை செய்த போது, வாஷிங்மிஷினுக்குள் ரூ. 1.30 கோடி இருந்தது தெரியவந்தது. இதனை போலீஸார் வருவாய் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
தெலங்கானா மாநிலத்தில் தேர்தல் நடைபெற இருப்பதால், மக்களுக்கு வழங்க ஹைதராபாத்துக்கு பணம் கடத்தப்பட்டு வருவதால், போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.