ரூ.10 கோடி சொத்துக்காக மனைவி கொலை

மண்டியா : நவம்பர் . 16 –
10 கோடி ரூபாய் சொத்துக்காக மனைவியை கொன்று இயற்கை மரணம் என்று நாடகமாடிய பேராசிரியர் கைது செய்யப்பட்டார். சினிமாவை மிஞ்சம் இந்த பரபரப்பு சம்பவம் கர்நாடக மாநிலம் மண்டியாவில் நடந்துள்ளது இது பற்றிய விபரம் வருமாறு.பெருமளவிலான 10 கோடி ரூபாய்கள் மதிப்புள்ள சொத்தை அடையும் பேராசையில் பேராசிரியர் ஒருவன் தன்னுடைய மனைவியையே கொலை செய்துள்ள சம்பவம் மண்டியாவின் வி வி நகர் லே அவுட்டில் நடந்துள்ளது. நகரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணியாற்றிவந்த டி என் சோமசேகர் (41) என்பவர் பணத்தின் மீது ஆசைகொண்டு தன்னுடைய மனைவி சுருதி (32) யை தலையணையால் மூச்சு கட்டி கொலை செய்துள்ளார். கொலை செய்த பின்னர் மனைவி இயற்கையாக இறந்துள்ளதாக நாடகமாடியுள்ளார். இவருடைய நாடகத்தை துப்பு துலக்கியுள்ள நகர போலீசார் இப்போது பேராசிரியரை கைது செய்து சிறைக்கு அனுப்பியுள்ளனர். மனைவி சுருதி உறங்கிக்கொண்டிருந்தபோது தலையணை மற்றும் படுக்கை விரிப்பால் அவள் மூச்சடைக்க செய்து கொலை செய்து விட்டு பின்னர் இது ஒரு இயற்கையான சாவு என நம்பவைக்க பேராசிரியர் முயற்சித்துள்ளார். ஆனால் தன் முயற்சி பலனளிக்காமல் தற்போது சிறைக்கு சென்றுள்ளார் . சில வருடங்களுக்கு முன்னர் ஸ்ருதியின் தந்தை உடல் னால குறைவால் இறந்து போனார். 2018ல் ஸ்ருதியின் தங்கை சுஷ்மிதா என்பவரும் விபத்தில் இறந்து போனார். இதனால் இவர்களின் சாவுக்கு பின்னர் ஸ்ருதி பெயர்க்கு 10 கோடி மதிப்பிலான சொத்து இவருடைய பெயருக்கு மாற்றலாகியிருந்தது. மைசூரின் முக்கிய இடங்களில் இருந்த வர்த்தக வளாகம் , வீடு மற்றும் மனைகள் ஆகியவற்றின் மீது சோமசேகருக்கு கண் பட்டது. இந்த சொத்துக்களை விற்றுவிடுமாறு ஸ்ருதியிடம் வற்புறுத்திவந்துள்ளார். மனைவியின் சொத்துக்களை விற்று விட்டு வேறு இடங்களில் சொத்துக்களை வாங்க இவர் திட்டமிட்டிருந்தார். ஆனால் தன் பெற்றோரின் சொத்தை விற்க சுருதி ஒப்புக்கொள்ளவில்லை. இது விஷயமாக கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி சண்டைகள் நடந்துள்ளது. கடந்த நவம்பர் 14 அன்று ஸ்ருதி உறங்கிக்கொண்டிருந்தபோது கணவன் சோமசேகர் தலையணையால் ஸ்ருதியின் முச்சை முட்டி கொலை செய்துள்ளார். இறந்து போன ஸ்ருதியின் சித்தப்பாவிற்கு போன் செய்து இது ஒரு சகஜ மரணம் என தெரிவித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த ஸ்ருதியின் சித்தப்பா குமாரசாமி என்பவர் போலீசில் புகார் அளித்திருந்தார். பின்னர் இது குறித்து விசாரணை மேற்கொண்டு உடற்கூறு ஸ்தானி செய்த பொது சுருதி மூச்சடைக்கப்பட்டு இறந்துள்ளது தெரியவந்துள்ளது. பின்னர் போலீசார் சோமசேகரை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர். அப்போது குற்றவாளி தான் மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். பின்னர் அவரை கைது சேது நீதிமன்ற காவலுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து மண்டியா மேற்கு பிரிவு போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவாகியுள்ளது.