ரூ.10 லட்சம் மதிப்புள்ள பெட்ரோல் டீசலை தெருவில் கொட்டிய விஷமிகள்

மண்டியா : ஆகஸ்ட். 22 – பழைய பகை காரணமாக விஷமிகள் பெட்ரோல் பங்கில் இருந்த 8 ஆயிரம் லிட்டர் பெட்ரோல் மற்றும் 2 ஆயிரம் லிட்டர் டீசல் ஆகியவற்றை வீதியில் இறைத்துள்ளனர் . இந்த சம்பவம் பாண்டவபுரா தாலூகாவின் பேபி என்ற கிராமத்தில் நடந்துள்ளது. இந்த கிராமத்தில் வசித்து வந்த பஸ்தி ரங்கப்பா என்பவர் இரண்டு மாதங்களுக்கு முன்னர் கிராமத்தின் அருகில் இந்தியன் பெட்ரோல் பங்க்கை துவங்கியிருந்த நிலையில் தங்கள் தனிப்பட்ட பகைக்காக விஷமிகள் இரவு பங்க்கின் ஊழியர் உணவுக்கு சென்றிருந்தபோது இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். முதலில் பங்க்கில் இருந்த பணத்தை கொள்ளையடிக்க முயற்சித்து அது இயலாமல் போகவே ஜெனெரேட்டரை ஆன் செய்து பெட்ரோல் மற்றும் டீசலை வெளியே விட செய்து விட்டு தப்பியோடியுள்ளனர். இதில் 8 ஆயிரம் லிட்டர் பெட்ரோல் பற்றும் 2 ஆயிரம் லிட்டர் டீசல் வீதியில் இறைக்கப்பட்டதில் சுமார் 10 லட்ச ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. பங்க் புதியதாய் அமைக்கப்பட்டதால் இன்னமும் சி சி டி வி காமிராக்கள் பொருத்தியிருக்கவில்லை. முதலில் பங்க்காய் திறந்து விட்டு பின்னர் அடுத்த பணிகள் நிதானமாக நடந்து வந்தன. ஆனால் இதையே தங்களுக்கு சாதகமாக்கிக்கொண்ட விஷமிகள் பெட்ரோல் பங்க் உரிமையாளர் சேகரித்து வைத்திருந்த பெட்ரோல் மற்றும் டீசலை வீதியில் இறைத்து தங்கள் பகைக்கு பழி வாங்கியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து பாண்டவபுரா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.