ரூ.100 கோடி லாபம் ஈட்டவுள்ள பெங்களூரு மெட்ரோ ரயில் கழகம்

பெங்களூரு, ஆக. 21: தொடங்கப்பட்ட 10 ஆண்டுகளில் முதன்முறையாக நம்ம மெட்ரோ ரயில் ரூ.100 கோடி லாபம் ஈட்டவுள்ளது. பெங்களூரு மெட்ரோ ரயில் கழகம் 10 ஆண்டுகளுக்கு லாபத்தை நோக்கி முன்னேறியுள்ளது. 2022-23 ஆம் ஆண்டில் லாப வரம்பிற்குள் வந்த மெட்ரோ ரயில் கழகம், 2023-24ல் ரூ.100 கோடி லாபத்தை ஈட்ட உள்ளது.. 2022-23ல் கட்டணம், உள்பட‌ பெங்களூரு மெட்ரோ ரயில் கழகம் ரூ.1,594.02 கோடி வருவாய் ஈட்டியது. இதில் ரூ.3,486.61 கோடி பராமரிப்பு செலவானது. இதர செலவுகளுக்குப் பிறகும் ரூ. 40 கோடி லாபம் ஈட்டியது. கரோனா பாதிப்பு இல்லாமல் இருந்திருந்தால் மெட்ரோ ர்யில் லாபகரமாக இருந்திருக்கும். அப்போது ஏற்பட்ட இழப்பில் இருந்து தற்போது மீண்டுள்ளது. இந்த ஆண்டு கட்டணத்தை உயர்த்தும் திட்டம் எதுவும் இல்லை என்று மெட்ரோ ரயில் கழக‌ அதிகாரிகள் தெரிவித்தனர்.கடந்த ஆண்டு சராசரியாக தினமும் 5.32 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளனர். இந்த ஆண்டு தினசரி பயணிகளின் எண்ணிக்கை 6.2 லட்சத்தில் இருந்து 6.3 லட்சமாக அதிகரித்துள்ளது. மெட்ரோ மக்களிடம் ஏற்படுத்தியிருக்கும் பாதுகாப்பு உணர்வால் இது சாத்தியமாகியுள்ளது. தற்போதைய பயணிகளின் எண்ணிக்கை மதிப்பீட்டின் அடிப்படையில் இந்த நிதியாண்டின் இறுதிக்குள் ரூ.100 கோடி லாபம் கிடைக்கும் என்று மெட்ரோ ரயில் கழகத்தின் நிர்வாக இயக்குநர் அஞ்சும் பர்வேஸ் தெரிவித்தார். ‘பையப்பனஹள்ளி-கே.ஆர். புரா இடையே 2.5 கி.மீ., கெங்கேரி-செல்லகட்டா இடையே 1.9 கி.மீ, பணிகள் நிறைவடைந்து, அனைத்து தொழில்நுட்ப பிரச்னைகளும் தீர்க்கப்பட்ட பின் வணிக போக்குவரத்து தொட‌ங்கும். போக்குவரத்து தொட‌ங்கிய உடனேயே பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதில்லை. தொடர்ந்து மெதுவாக அதிகரிக்கும். குறைந்தபட்சம் மூன்று மாதங்கள் ரயிலை இயக்கினால், தினசரி பயணிகளின் எண்ணிக்கை 7 லட்சத்தை எட்டும். இந்த நிதியாண்டில் லாபத்தில் இது பெரிய பங்களிப்பாக இல்லாவிட்டாலும், அடுத்த ஆண்டு நல்ல லாபத்தைத் தரும் என்று அஞ்சும் பர்வேஸ் கருத்து தெரிவித்துள்ளார். தற்போதுள்ள பச்சை மற்றும் ஊதா வழித்தடங்களுடன், நீலம், மஞ்சள் மற்றும் நீல வழித்தடங்களும் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் தொடங்கப்படும். தற்போதுள்ள மெட்ரோ நெட்வொர்க் இரண்டு மடங்காக (175 கிமீ) உயர்த்தப்படும். 2022-23 பயணிகளிடமிருந்து ரூ.422.61 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதில் ரூ.171.41 கோடி பிற கட்டணங்கள் மூலம் வருவாய் கிடைத்துள்ளது. இதில் ரூ.486.61 கோடி நிர்வாகத்திற்காக‌ செலவாகி உள்ளது. 2023 ஏப்ரல் முதல் ஜூலை வரை பயணிகளிடமிருந்து ரூ. 170.58 கோடி, மற்ற கட்டணங்கள் மூலம் ரூ.20.09 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதில் ரூ.186.92 கோடி பராமரிப்பு செலவாகி உள்ளது.