ரூ.130 கோடி கொக்கைன் போதை பறிமுதல்

காந்திதாம்: ஜூன் 6- குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் உள்ள காந்திதாம் நகருக்கு அருகில் நேற்று அதிகாலை ரூ.130 கோடி மதிப்பிலான 13 கொக்கைன் போதைப்பொருள் பாக்கெட்டுகள் பிடிபட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கட்ச்-கிழக்குபிரிவு காவல்துறை கண்காணிப்பாளர் சாகர் பாக்மர் மற்றும் பயங்கரவாத தடுப்புப் படை கண்காணிப்பாளர் சுனில் ஜோஷி கூறியதாவது:
கொக்கைன் போதைப்பொருள் பிடிபடாமல் இருக்ககடற்கரை பகுதியில் அவற்றை கடத்தல்காரர்கள் பதுக்கி வைத்ததுமுதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. பயங்கரவாத தடுப்புப் படை மற்றும் சிறப்பு செயல்பாட்டுக் குழுவின் கூட்டுக் குழு காந்திதாம் நகருக்கு அருகிலுள்ள மிதி ரோஹர் கிராமத்தில் இருந்து 13 கொக்கைன் பாக்கெட்டுகளை கைப்பற்றின. சர்வதேச சந்தையில்இதன் மதிப்பு ரூ.130 கோடியாகும். இப்போது கண்டெடுத்திருக்கும் கொக்கைன் பாக்கெட்டுகள் கடந்தஆண்டு செப்டம்பரில் இதேபகுதியில் இருந்து கைப்பற்றப்பட்ட பாக்கெட்டுகள் போலவேஉள்ளன. இதுகுறித்து விசாரணை மேற் கொண்டு வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.