ரூ.1700 கோடி அபராதம் – ஆன்லைனில் வசூலிக்க தீவிரம்

பெங்களூர், மே 4- போக்குவரத்து நியமங்களை மீறிய குற்றங்கள் தொடர்பாக மாநிலம் முழுக்க 3.25 கோடி புகார்கள் பதிவாகியுள்ளன . இதன் வாயிலாக ருபாய் 1700 கோடி அபராத தொகை பாக்கி உள்ளது. இந்த அபராத தொகையை வசூலிக்க போக்குவரத்து போலீசார் நவீன வகையில் ஆன் லைன் வசதிகள் அறிவித்துள்ளனர். பெங்களூர் போலீஸ் ஆணையர் சரகத்தில் போக்குவரத்து நியமங்கள் மீறல் செய்தவர்களிடமிருந்து அபராதம் வசூலிக்க ஏற்கெனவே ஆன் லைன் வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதுடன் இப்போது இதே முறையை மாநிலம் முழுக்க டைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.பெங்களூர் நீங்கலாக மற்ற மாவட்ட மக்கள் இந்த வசதியை பயன்படுத்தி தங்கள் அபராத தொகைகளை செலுத்தவேண்டும் என சாலை போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு ஏ டி ஜி பி அலோக் குமார் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில் மக்கள் பே பைன். செல்லான். காம் . 7271 என்ற போக்குவரத்து வலை தலத்திற்கு சென்று என்ற முகவரிக்கு சென்று தங்கள் வாகன பதிவு எண் பதிவு செய்யவேண்டும். பின்னர் திரையில் அந்த வாகனத்திற்க்கான அபராத விவரம் தெரிய வரும். அதை கொண்டு ஆன் லைன் வாயிலாகவே அபராத தொகையை செலுத்தவேண்டும். பெங்களூரில் 2.68 கோடி போக்குவரத்து நியமங்கள் மீறல் பதிவாகி இவற்றின் வாயிலாக 1425 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது. மற்றபடி வேறு பல மாவட்டங்களிலும் அபராத தொகை பாக்கிகள் உள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் தான் அபராத தொகையில் 50 சதவிகிதம் கழிவு அளிக்கப்பட்டது அந்த சமயத்தில் பலரும் அபராத தொகையை கட்டினார்கள் . ஆனாலும் சிலர் இன்னும் அபராத தொகையை செலுத்தாமல் உள்ளனர். அத்தகையவர்களை கண்டுபிடித்து அபராதத்தொகையை வசூலிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அலோக் குமார் தெரிவித்தார்.