நாட்டின் பல இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு

புதுடில்லி, மார்ச் 30-
கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் இதற்கு மத்தியிலும், பல இடங்களில் மழை பெய்து வருகிறது.
அடுத்த இரண்டு வாரங்களில் நாட்டின் சில பகுதிகளில் வெப்ப அலை மற்றும் சராசரிக்கும் குறைவான மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
ஏற்கனவே, பல மாநிலங்களில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் தாண்டியது.
இந்திய வானிலை ஆய்வு மையக் கருத்தின் படி, இந்தியா முழுவதும் பருவ காலம் மழை பொழிவு ,நீண்டகால சராசரியை விட ஏழு சதவீதம் குறைவாக இருந்தது.
அதே நேரத்தில் வடமேற்கு இந்தியாவில் 19 சதவீதம் குறிப்பிடத்தக்க பற்றாக்குறையை கண்டது.
ராயலசீமா, தமிழகம், புதுச்சேரி, உள்ளிட்ட காரைக்கால், கேரளா, மாஹே ஆகிய இடங்களில் மார்ச் 28 முதல் ஏப்ரல் 1ம் தேதி வரை வெப்பம் மற்றும் ஈரப்பதம் இருக்கும்.
மேலும் நாட்டின் சில பகுதிகளுக்கு வெளி மண்டலியல் அனல் காற்றின் தாக்கம், வட உள்நாட்டில் பல்வேறு இடங்களில் காணப்படும்.
என தெரிவித்துள்ளது.
ஜம்மு, காஷ்மீர் இமாச்சல் பிரதேஷ், உத்தரகாண்ட், ஆகிய மாநிலங்களில் மார்ச் 30ம் தேதி பல இடங்களில் இடையே மழை , பனிப்பொழிவு, மற்றும் ஆலங்கட்டி மழை பெய்யக்கூடும்.
மார்ச் 30 முதல் ஏப்ரல் 1ம் தேதி வரை அசாம் மற்றும் மேகாலயாவில் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் கன மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 30 முதல் ஏப்ரல் ஒன்று வரை அருணாச்சலப் பிரதேசத்தில் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் கன மழை பனிப்பொழிவு எதிர்பார்க்கப்படுகிறது.
பஞ்சாப், இமாச்சல் பிரதேஷ், ஜம்மு, காஷ்மீர், ஹரியானா, சண்டிகர், உத்தரகாண்ட், ஆகிய இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
டெல்லியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். லேசான மழை அல்லது தூறலுக்கு சாத்தியமாகும்.
இதன் காரணமாக அதிகபட்ச வெப்பநிலை இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் குறையும்.
ஸ்கை மேட் வானிலை படி, தெற்கு ஹரியானா டெல்லி, வடக்கு ராஜஸ்தான், உத்தர பிரதேசத்தில் மேற்குப் பகுதிகள், சிக்கிம் மற்றும் வடகிழக்கு இந்தியாவில் அடுத்த 24 மணி நேரத்திற்கு லேசான மழை பெய்யக்கூடும்.
மத்திய பிரதேஷ், உத்தர பிரதேஷ், பீகார், ஜார்க்கண்ட் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் மார்ச் 30ம் தேதி லேசான மழை பெய்யக்கூடும்.
விதர்பா மற்றும் வடக்கு உள் கர்நாடகாவில் சில பகுதிகளில் வெப்ப அலை சாத்தியமாகும்.