ரூ.2 கோடி வைரம் பறிமுதல்

சூரத், ஜூன் 17. குஜராத்தின் சூரத் விமான நிலையத்தில், துபாய் செல்ல முயன்ற பயணி ஒருவரிடம் ரூ.2.19 கோடி மதிப்புள்ள பட்டை தீட்டப்படாத வைரம் பறிமுதல் செய்யப்பட்டது.குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள எஸ்எச்ஏ சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளிடம் வழக்கமான பரிசோதனை நேற்று முன்தினம் காலை மேற்கொள்ளப்பட்டது. அப்போது துபாய் செல்லும் இண்டிகோ விமான நிலையத்தில் ஏறுவதற்காக சஞ்சய்பாய் மொரோ தியா என்பவர் வந்தார். அவரிடம் மத்திய தொழில் பாதுகாப்பு படை (சிஐஎஸ்எப்) காவலர் சோதனை நடத்தினார்.அப்போது அவர் சாக்ஸ் அணிந்திருந்த இடத்தில் பை போன்றபொருள் மறைத்து வைக்கப்பட் டிருப்பதாக காவலருக்கு சந்தேகம் ஏற்பட்டது.இதையடுத்து அவர உடல்பகுதி முழுவதும் சோதனையிடப் பட்டது. அப்போது சாக்ஸ் மற்றும் உள்ளாடையில் 3 பாக்கெட்டுகளில் பட்டை தீட்டப்படாத வைர கற்கள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 1,092 கிரோம் எடையுள்ள இந்த வைரகற்களின் மதிப்பு ரூ. 2.19 கோடி.இதையடுத்து சஞ்சய் பாய், மேல்விசாரணைக்காக சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.