ரூ. 25 லட்சம் போதை பொருள் பறிமுதல் வெளிநாட்டு ஆசாமி கைது

பெங்களூர் : நவம்பர். 9 – போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டுவந்திருந்த பாலிக்ஸ்டைன் நாட்டை சேர்ந்த ஒருவனை கைது செய்துள்ள சி சி பி போலீசார் அவனிடமிருந்து ரூபாய் 25 லட்சங்கள் மதிப்புள்ள எம் டி எம் ஏ போதை பொருள்களை கைப்பற்றியுள்ளனர். பாலிக்ஸ்டைன் நாட்டை சேர்ந்த ஹசன் டபுள்யூ ஏ ஹாஷிம் (25 ) என்பவன் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளி . இவனிடமிருந்து 25 லட்ச ரூபாய்கள் மதிப்புள்ள 320 கிராம் எம் டி எம் ஏ , மொபைல் , மின் எடை கருவி , ஆகியவை கைப்பற்றப்பட்டு கூடுதல் விசாரணை நடந்து வருவதாக டி சி பி டாகடர் ஷரணப்பா தெரிவித்தார். பாலிக்ஸ்டைன் நாட்டை சேர்ந்த குற்றவாளி கடந்த ஆறு வருடங்களுக்கு முன்னர் மாணவர் விசா பெற்று பெங்களூருக்கு வந்திருப்பதுடன் குறைந்த நேரத்தில் அதிக பணம் சம்பாதிக்கும் ஆசையில் மீண்டும் வியாபார விசாவில் நகருக்கு வந்து சூடான் நாட்டை சேர்ந்த மற்றொரு போதை பொருள் கடத்தல் காரனிடம் சேர்ந்து எலஹங்காவில் உள்ள உபநகரில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். சூடான் நாட்டை சேர்ந்தவனிடமிருந்து குறைந்த விலைக்கு போதை பொருள்களை வாங்கி பின்னர் ஒரு கிராம் எம் டி எம் எவை 8 முதல் 8500 வரை அதிக விலைக்கு தனக்கு அறிமுகமுள்ள வாடிக்கையாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு விற்று வந்துள்ளான். இதில் கிடைத்த பணத்தில் ஆடம்பரமாக வாழ்ந்து வந்துள்ளான் என்பது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த வழக்கில் சூடான் நாட்டை சேர்ந்த போதை பொருள்கடத்தல்காரன் தற்போது தலைமறைவாயிருப்பதுடன் அவனை கைது செய்ய போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். குற்றவாளிக்கு எதிராக எலஹங்கா நியூ டவுன் போலீஸ் நிலையத்தில் ஏன் டி பி எஸ் , சட்ட பிரிவு 1985 மற்றும் வெளிநாட்டவர் சட்ட விதிகளின்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் டி சி பி ஷரணப்பா தெரிவித்தார்.