ரூ.2,500 கோடிகிரிப்டோ கரன்சி ஊழல்

சிம்லா:நவம்பர் 11- இமாச்சலப் பிரதேசத்தில் ரூ.2,500 கோடி அளவுக்கு நடைபெற்ற கிரிப்டோ கரன்சி ஊழலில் சுமார் 1 லட்சம் பேர் முதலீடு செய்துள்ளனர்.
இவர்களில் 5 பேர் அரசு ஊழியர்கள் என தெரியவந்துள்ளது.இந்த திட்டத்தில் சேர்ந்தவர், மற்ற நபர்களை இந்த திட்டத்தில் சேர்த்து விட்டதால், அவர்களுக்கு நல்ல கமிஷனும் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக பல ஏஜென்டுகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதில் ஆயிரக்கணக்கான போலீஸாரும் இணைந்து ஏஜென்டுகளாக செயல்பட்டுள்ளனர். நல்ல கமிஷன் கிடைத்ததால், சிலர் போலீஸ் வேலைக்கு விஆர்எஸ் கொடுத்துவிட்டு, கேஆர்ஓ காயின்ஸ் திட்டத்தில் முதலீட்டாளர்களை சேர்ப்பதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இமாச்சலப் பிரதேசத்தின் மாண்டி, ஹமிர்பூர் மற்றும் கங்க்ரா மாவட்டங்களில் 4 வழிச் சாலைக்காக அரசுக்கு நிலங்கள் கொடுத்து இழப்பீடு பெற்றவர்களை குறிவைத்து இந்த ஏஜென்டுகள் அதிக அளவிலான முதலீடுகளை ஈர்த்துள்ளனர்.
அதிக லாபம் என ஆசை வார்த்தை கூறப்பட்டதால் கிரிப்டோ கரன்சியில் அரசு ஊழியர்கள் 5,000 பேர் வரை முதலீடு செய்துள்ளனர்.
போலி இணையதளங்கள் மூலம் கிரிப்டோ கரன்சியின் மதிப்பும் குறுகிய காலத்தில் உயர்த்தி காட்டப்பட்டுள்ளது. இதை நம்பி இமாச்சல் மக்கள் முதலீடு செய்தனர். இந்த முதலீட்டின் மதிப்பு ரூ.2,500 கோடி.