ரூ.31 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல்

பெங்களூர் நவ.22 பகுதி வாலிபர்களுக்கு மது விருந்து கொடுத்து உல்லாசமாக வாழ திருடி வந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். கிரிநகர் போலிசார் இவர்களை கைது செய்துள்ளனர். இவர்களிடமிருந்து 31 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 662 கிராம் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர் கைது செய்யப்பட்ட உள்ளவர்கள்
ரபிக் என்ற செட்டி மற்றும் அயூப்கான் ஆவர். இவர்களில் ரபீக் 4 மாதங்களுக்கு முன்பு சிறைக்குச் சென்று திரும்பியவன் இவன் கே.ஆர்.புரா தேவசந்திராவில் வசிப்பவன், இவன் புட்டெனஹள்ளி, , கிரிநகர், கே.எஸ். லேஅவுட் .கே புரம். கெங்கேரி, கப்பன் பார்க், ராமமூர்த்தி நகர், கலாசிபலையா, ஜெ.சி.நகர், பீனியா, பத்ரஹள்ளி, சித்ரதுர்கா, ஹிரியூர் மற்றும் சிக்கமகளூரு டவுன் காவல் நிலைய அதிகார வரம்புகளில் 20 க்கும் மேற்பட்ட இடங்களில் கொள்ளை அடித்து உள்ளனர் முன்னதாக பல்வேறு இடங்களுக்கு சென்று நோட்டம் விட்டு பூட்டி உள்ள வீடுகளை அடையாளம் கண்டு கொண்டு அதன் பிறகு திரும்பி வந்தது தெரியவந்துள்ளது இவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.