பெங்களுர் : செப்டம்பர் . 13 – தொழிலதிபர் ஒருவருக்கு கடந்த மாநில சட்டமன்ற தேர்தலில் டிக்கெட் பெற்று தருவதாக நம்பவைத்து கோடி கணக்கில் மோசடி செய்துள்ள தீவிர பேச்சாளர் பயர் ப்ராண்ட் புகழ் ஹிந்து அமைப்பு தீவிரவாதி மற்றும் தொண்டர் சைத்ரா குந்தாபுரா என்பவரை சி சி பி போலீசார் உடுப்பியில் கைது செய்துள்ளனர் . இந்த மோசடி விவகாரம் குறித்து பிரசாத் , ககன் மற்றும் ப்ரஜ்வால் ஷெட்டி ஆகியோரை கைது செய்து இந்த மோசடியில் தலைமறைவாயிருந்த முக்கிய புள்ளி சைத்ரா குந்தாபுராவை நம்பகமான தகவல்களை வைத்து சி சி பி போலீசார் உடுப்பியில் கிருஷ்ண மடம் அருகில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் கைது செய்து அவரை நகருக்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பைந்தூரு தொகுதியிலிருந்து பி ஜே பி டிக்கெட் வாங்கித்தருவதாக நம்பவைத்து பணம் வாங்கிக்கொண்டு மோசடி செய்ததாக சைத்ரா உட்பட 8 பேருக்கு எதிராக பைந்தூரு நகரை சேர்ந்த தொழிலதிபர் கோவிந்த பாபு பூஜாரி என்பவர் பண்டெபால்யா போலீசில் புகார் அளித்திருந்தார். இந்த வழக்கை தீவிரமாக கருதிய பண்டேபால்யா போலீசார் வழக்கை சி சி பிக்கு மாற்றிய நிலையில் விசாரணை மேற்கொண்ட சி சி பி போலீசார் பிரசாத் , ககன் மற்றும் ப்ரஜ்வல் ஆகியோரை கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு பின்னர் அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் தலைமறைவாயிருந்த சைத்ரா குந்தாபுராவை தற்போது கைது செய்துள்ளனர். தவிர இவருடைய கூட்டாளியான ஸ்ரீகாந்த் நாயக் என்பவரையும் தங்கள் வசம் எடுத்து சி சி பி போலீசார் விசாரித்து வருகின்றனர். கடந்த 2023 மாநில சட்டமன்ற தேர்தலின் போது முதலீடுகள் எதுவும் இல்லாமல் பணத்தை சம்பாதிக்கும் நோக்கில் எட்டு பேர் கொண்ட குழுவினர் திட்டமிட்டிருந்தனர். பைந்தூரை சேர்ந்த செஃப் டாக் நிறுவன தொழிலதிபர் கோவிந்த பாபு பூஜாரி என்பவர் பைந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு பிஜேபி டிக்கெட்டுக்காக மிகவும் முயற்சித்து வந்துள்ளார். இது குறித்து அறிந்த இந்த கும்பல் சைத்ரா குந்தாபுராவை இவருக்கு அறிமுகம் செய்வித்து இவருக்கு கட்சி மேலிட தலைவர்களிடம் நல்ல தொடர்பு இருப்பதாக கூறி நம்பவைத்து இவர் தெரிவித்தால் மேலிடம் நிச்சயம் டிக்கெட் கொடுக்கும் எனவும் நம்பவைத்து இவரிடமிருந்து 4 கோடி வரையில் தவணை முறையில் பெற்று மோசடி செய்துள்ளனர் . ஆனால் பின்னர் பைந்தூரிலில் தனக்கு டிக்கெட் கிடைக்காத நிலையில் தன்னுடைய பணத்தை திருப்பித்தருமாறு கேட்டும் சைத்ரா கும்பல் பணத்தை திருப்பி தராததால் கோவிந்த ராஜு பூஜாரி போலீசில் புகார் அளித்துள்ள நிலையில் தற்போது இந்த வழக்கு சம்மந்தமாக சைத்ரா மற்றும் அவருடைய கூட்டாளிகளை சி சி பி போலீசார் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுத்தியுள்ளனர் .