ரூ .400 கோடி மோசடி புகாரில் ரோசன் பெய்க் கைது

பெங்களூர் நவ. 22. ஐஎம்ஏ நிதி நிறுவன தலைவர் கொடுத்த புகாரில் முன்னாள் அமைச்சர் ரோசன் பெய்க் கைது செய்யப்பட்டார் சிபிஐ இவரை கைது செய்துள்ளது. பெங்களூர் சிவாஜி நகரில் ஐஎம்ஏ தங்க நகை கடை மற்றும் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் ரூ 9 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்ததாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதன் தலைவர் மன்சூர் அலி கான் கைது செய்யப்பட்டார். இவர் தனது நிதி நிறுவன பணத்தை முன்னாள் அமைச்சர் ரோசன் பெய்க் அபகரித்து விட்டதாகவும் 400 கோடி ரூபாய் அவரிடம் இருப்பதாகவும் பரபரப்பு புகார் கூறினார் இதுதொடர்பாக விசாரணை நடந்து வந்தது இந்த நிலையில் ரோஷன் பெய்க் கைது செய்யப்பட்டுள்ளார். கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர்களில் ஒருவராக திகழ்ந்த இவர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு பிஜேபியில் சேர்ந்தார். சிவாஜி நகர் தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கி இருந்தார் இந்த நிலையில் சிபிஐ இவரை கைது செய்துள்ளது. இவரை 14 நாட்கள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது