ரூ.4,000 கோடி மாளிகை, 700 கார்கள்

அபுதாபி:ஜனவரி 20
உலகின் செல்வச் செழிப்புமிக்க குடும்பங்களின் பட்டியலில் ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைவர் அல் நஹ்யான் குடும்பம் முதல் இடத்தில் உள்ளது.
எம்பிஇசட் என்று அழைக்கப்படும் சேக் முகம்மது பின் செய்யத்அல் நஹ்யான் 2022-ம் ஆண்டு ஒட்டுமொத்த ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைவராக பொறுப்பேற்றார்.
18 சகோதரர்கள், 11 சகோதரிகள், 9 குழந்தைகள், 18 பேரக் குழந்தைகள் என இவரது குடும்பம் மிகப் பெரியது. அவரது குடும்பம் வசிக்கும் மாளிகையின் மதிப்பு ரூ.4,078 கோடி ஆகும். 700 சொகுசு கார்கள் 8 ஜெட் விமானங்கள் இக்குடும்பத்தினர் வசம் உள்ளது.உலகின் மொத்த எண்ணெய் வளத்தில், நஹ்யான் குடும்பத்தின் வசம் மட்டும் 6 சதவீதம் உள்ளது. உலகின் மிகப் பெரிய நிறுவனங்களில் இக்குடும்பத்தினர் முதலீடு செய்துள்ளனர். பாடகி ரிஹானாவின் அழகு சாதன நிறுவனமான ஃபென்டி முதல் எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் வரையில் இக்குடும்பத்தினர் பலதரப்பட்ட தளங்களில் முதலீடு மேற்கொண்டுள்ளனர்.