ரூ.440 மதிப்புள்ள கருக்கலைப்பு மாத்திரைரூ.4 ஆயிரத்திற்கு விற்பனை

மண்டியா : மார்ச். 7 – கருக்கலைப்புக்கு பயன்படுத்தும் மருத்துவ கிட்களை மாவட்டம் முழுக்க கள்ளச்சந்தையில் சட்டவிரோதமாக 10 மடங்கு அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டுவந்துள்ளது. ரூபாய் 440 மதிப்புள்ள மாத்திரைகள் கள்ள சந்தையில் நான்காயிரத்திற்கும் அதிகமான விலைக்கு விற்கப்பட்டுள்ளதாதாக தெரிய வந்துள்ளது. இந்த மாவத்தில் சட்ட விரோதமாக பெண் சிசுக்கள் கருச்சிதைவு கள் செய்யப்பட்டுள்ளன. என்ற புகார் குறித்து சுகாதார துறை அதிகாரிகள் நடத்திய ஆரம்ப கட்ட விசாரணைகளில் இத்தகைய அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 2023 ஜனவரி மாதம் முதல் டிசெம்பர் 12 வரை மாவட்டத்தின் 12 மருந்து விற்பனை கூடங்களில் 6626 டி எம் சி ( மருத்துவ ரீதியில் கருச்சிதைவு ) கிட்டுகள் விற்பனையாகியுள்ளன. இந்த கிட்டுகளில் மிபேப்ரிஸ்டான் , மிஸோப்ரோஸ்ட் ஆகிய மாத்திரைகள் இருந்திருப்பதுடன் இவற்றின் முக விலை வெறும் 440 ரூபாய்களாகும் .
ஆனால் சில மருத்துவர்கள் மற்றும் மருந்து கடைக்காரர்கள் இந்த கிட்டுகளை 4ஆயிரம் ருபாய் வரையில் அதிக விலைக்கு விற்று வந்துள்ளனர். என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவசர நிலைகளில் தாய் மற்றும் குழந்தையை காப்பாற்ற பயன்படுத்தும் எம் டி பி கிட்டுகளை பெண் கரு சிதைவுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமலே இந்த கிட்டுகள் விற்பனை செய்யப்பட்டிருப்பதே மாவட்டத்தில் அதிக பெண் சிறு கருச்சிதைவுக்கு காரணம் எனவும் தெரிய வந்துள்ளது.
உதவி மருந்துகள் கட்டுப்பாடு அலுவலகம் அளித்துள்ள தகவலின்படி மாவட்டத்தில் சிறிய பெரிய மருந்து கடைகளில் சட்டவிரோதமாக எம் டி சி கிட்டுகள் விற்கப்படுகின்றன. மாவட்டத்தில் 30 மொத்த மருந்து விற்பனை மையங்கள் உள்ளன.
இதில் 12 பேர் மட்டுமே கருச்சிதைவு கிட் விற்பனை குறித்த தகவல்களை அளித்துள்ளனர்.
மீதமுள்ள 18 கடைக்காரர்களுக்கு விளக்கம் அளிக்குமாறு சுகாதார துறை நோட்டீஸ் அளித்துள்ளது. இதில் 15 ஆயிரத்திற்கும் அதிகமானகருச்சிதைவு கிட்டுகள் விற்பனையாகியிருக்கும் வாய்ப்புகள் உள்ளன. ஆனால் மருந்து கடைகள் அனைவரும் சரியான விளக்கம் அளித்தால் முழு விவரம் தெரிய வரும்.மாத்திரைகள் இந்த விலைக்கு தான் விற்கப்பட்டது என்பதற்கான ஆதாரம் எதுவும் இல்லை. 4 ஆயிரத்திற்கும் அதிகமான விலைக்கு விற்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதற்க்கு அதிகமான விலைக்கு விற்கப்பட்டிருக்கவும் வாய்ப்புகள் உள்ளன. நர்சிங்க் ஹோம்களுடன் இணைந்துள்ள மருந்து கடைகள் ஒரே பெயருள்ள மருத்துவருக்கு பல கருச்சிதைவு கிட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.இதற்க்கு உயர் மட்ட விசாரணை தேவைப்படுகிறது என சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்தனர். எம் டி சி கிட்டுகளை விற்றுள்ள மொத்த மற்றும் சில்லறை மருந்து கடைகள் ஒவ்வொரு கிட்டுக்கும் மருத்துவரின் பரிந்துரை சீட்டு மற்றும் விற்பனை பில் ஆகியவற்றை காட்ட வேண்டும். தவறினால் இவர்களை பெண் சிசு கொலை குற்றத்திற்கு ஆளாக்கி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என சுகாதார துறை அதிகாரிகள் அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.