ரூ 45 கோடி பறிமுதல் செய்த அதிகாரிகள்

xr:d:DAFhY5Sj-jU:3,j:46069461694,t:23042811

பெங்களூர் ஜூன் 7-
மகரிஷி வால்மீகி கார்ப்ரேஷனில் பலகோடி முறைகேடு, மோசடி, தொடர்பான விசாரணையை முடுக்கிவிட்ட எஸ்.ஐ.டி., ஐதராபாத் நிதி கூட்டுறவு வங்கி கணக்கில் ரூ.45 கோடியை பறிமுதல் செய்துள்ளது.
இந்த வழக்கில் எஸ்.ஐ.டி., யால் கைது செய்யப்பட்ட குற்றம் சாட்டப்பட்டுள்ள சத்தியநாராயணா, இடகாரி, கூட்டுறவு வங்கியின் தலைவராக இருந்தார். வால்மீகி கார்ப்பரேஷன் வங்கி கணக்கிலிருந்து 18 போலி கணக்குகளால்ரூ. 94 .73 கோடியை முறைகேடாக மாற்றப்பட்டது. இந்த பணத்தின் பெரும் பகுதி ஏற்கனவே திரும்ப பெறப்பட்டது.
மீதமுள்ள பணம் எங்கே போனது என்று எஸ்.ஐ.டி. விசாரித்து வருகிறது. யூனியன் பாங்க் ஆப் இந்தியாவின் எம்.ஜி. ரோடு, கிளையில் வால்மீகி கார்ப்பரேஷனில் இருந்து நிதி கூட்டுறவு வங்கி கணக்குகளுக்கு பணம் மாற்றப்பட்டது. நிதி கூட்டுறவு வங்கியில் முறைகேடாக பண பரிமாற்றத்திற்காக 18 போலி கணக்குகள் தொடங்கபட்டது தெரிய வந்துள்ளது.
மேலும் சட்டத்துக்கு புறம்பாக மாநகராட்சி கணக்கு வசந்த நகர் கிளைகளில் இருந்து எம்.ஜி. ரோடு கிளைக்கு சட்டவிராத பணப்பரிமாற்றத்திற்கும் போலி ஆவணங்கள் உருவாக்கியுள்ளனர். என்று விசாரணையில் தெரியவந்துள்ளதாக எஸ்ஐடி அதிகாரிகள் தெரிவித்தனர்.விசாரணையில் போலி கணக்கு மற்றும் ஆவணங்களை உருவாக்கி சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் செய்ததில் குற்றம் சாட்டப்பட்ட நாகராஜ் நிகண்டியின் பங்கு உறுதியானது.
சட்ட விரோத செயலில் வங்கி அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதும் உறுதி என்று எஸ்.ஐ.டி. வட்டாரங்கள் தெரிவித்தனர்.