ரூ.45 லட்சம் போதைப்பொருள் பறிமுதல் நைஜீரிய ஆசாமி கைது

பெங்களூர்: ஜூன்3 –
போதை பொருள்கள் உட்கொள்ளுதல் , விநியோகம் மற்றும் விற்பனைக்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுத்து வரும் சி சி பி போலீசார் போதை பொருள்கள் விற்பனையில் ஈடுபட்டிருந்த நைஜீரியாவை சேர்ந்த ஒருவனை கைது செய்து அவனிடமிருந்து 45 லட்ச ரூபாய்கள் மதிப்புள்ள பொருள்களை கைப்பற்றியுள்ளனர்.
போதை பொருள்களை விற்று வந்த நைஜீரியா பிரஜையிடமிருந்து 35 ஆயிரம் ரூபாய்கள் ரொக்கம் , மற்றும் 35 லட்ச ரூபாய்கள் மதிப்புள்ள 221 கிராம் 586 எம் டி எம் ஏ மாத்திரைகள் , 10 லட்ச ரூபாய்கள் மதிப்புள்ள டயோட்டா கார் , இரண்டு மொபைல் போன்கள் , எலெக்ட்ரானிக் தராசு ஆகியவற்றை கைப்பற்றியுள்ளதாக டி சி பி டாக்டர் எஸ் டி ஷரணப்பா தெரிவித்தார். மூன்று நாட்களுக்கு முன்னர் வியாபாரி விசாவில் நகருக்கு வந்து அதிக பணத்தை எளிதாக சம்பாதிக்க டெல்லியில் தங்கியிருந்த நைஜீரியாவை சேர்ந்த அறிமுகமானவனிடமிருந்து குறைந்த விலைக்கு போதை பொருள்களை வாங்கி நகருக்கு திருட்டுதனமாக கடத்திவந்து மாரத்தஹள்ளியின் சுற்றுப்பகுதிகளில் அறிமுகமுள்ள வாடிக்கையாளர்களுக்கு , ஐ டி பி டி ஊழியர்களுக்கு மற்றும் பிரபல கல்லூரி மாணவர்களுக்கு ஒரு எம் டி எம் ஏ மாத்திரையை 5 முதல் ஆறாயிரம் ருபாய் என அதிக விலைக்கு விற்பனை செய்து அதிக பணம் சம்பாதித்து வந்தது குற்றவாளியின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இவனுக்கு எதிராக மாரத்தஹள்ளி போலீஸ் நிலையத்தில் என் டி பி எஸ் சட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கூடுதல் விசாரணை நடந்து வருகிறது.