ரூ.5 கோடியே 60 லட்சம் மதிப்புள்ள பணம் தங்கம் வெள்ளி பறிமுதல்

பெல்லாரி, ஏப்.8- பெல்லாரி போலீசார் ஞாயிற்றுக்கிழமை ஆவணங்கள் இல்லாத5 கோடியே 60 லட்சம் மதிப்பிலான ரொக்கம், தங்கம், மற்றும் வெள்ளி நகைகள் மற்றும் கச்சா வெள்ளியை பறிமுதல் செய்தனர். இங்குள்ள கம்பாரி பஜாரில் உள்ள தங்க கடை உரிமையாளர் நரேஷ் வீட்டில் டி.எஸ்.பி. நந்தா ரெட்டி, புரூஸ் பேட்டை சிபிஐ செந்தூரான் மற்றும் குழுவினர் சோதனை நடத்தினர். 5 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆவணங்கள் இல்லாமல் வீட்டில் வைக்கப்பட்டு இருந்தது. ரொக்கம், 3 கிலோ தங்கம் 103 கிலோ வெள்ளி, ஆபரணங்கள், 68 கிலோ பச்சை வெள்ளி, ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. எதற்காக இவ்வளவு பெரிய தொகையையும் வீட்டில் வைத்திருந்தார். அவைகளை பறிமுதல் செய்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீஸ் எஸ்.பி., ரஞ்சித் குமார் பண்டாரு கூறுகையில், நரேஷ் கைது செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இது கருப்பு பணமா அல்லது தேர்தல் பின்னணிக்காக சேகரிக்க வைக்கப்பட்டதா என்பது விசாரணைக்கு பிறகு தெரியவரும். இது சம்பந்தமாக துறை அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்படும் என்றார்.
சில நாட்களுக்கு முன் நகரில் உள்ள சில நகைக்கடைகளில் விற்பனை வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த நிலையில் கைதான கடை உரிமையாளர் நரேஷ் வீட்டில் பணம் மற்றும் தங்க நகைகளை வைத்திருந்ததாக கூறப்படுகிறது.லோக்சபா தேர்தலின் போது தங்க கடை உரிமையாளர் வீட்டில் கட்டு கட்டாக. ரொக்கம், மற்றும் கிலோ கணக்கில் தங்க நகைகள் சிக்கியது. பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.