Home Front Page News ரூ. 500 நோட்டுகளை பறக்கவிட்ட குரங்கு

ரூ. 500 நோட்டுகளை பறக்கவிட்ட குரங்கு

திண்டுக்கல், ஜூன் 16-
கொடைக்கானல் குணா குகைப் பகுதியில் சுற்றுலாப் பயணியிடமிருந்து ரூ.500 கட்டு ஒன்றைப் பறித்துச்சென்ற குரங்கு, மரத்தின்மேல் சென்று, ஒவ்வொரு தாளாக பறக்கவிட்ட காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு ஆண்டுதோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.
குணா படத்தால் பிரபலமான குணா குகை சுற்றுலா மையம், ‘மஞ்சுமல் பாய்ஸ்’ என்ற மவையாளப் படம் வெளியான பிறகு பல்வேறு மாநிலங்களிலும் பெரிதும் பிரபலமடைந்தது.
கடந்த வாரம் இளைஞர் ஒருவர் ரீல்ஸ் மோகம் காரணமாக தடுப்பு வேலியைக் கடந்து சென்று, ஆபத்தான பகுதியில் வீடியோ எடுத்து ரீல்ஸ் வெளியிட்டதும் சர்ச்சைக்குள்ளானது.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு குணா குகைப் பகுதியை பார்வையிட வந்த கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர், தனது பையில் 500 ரூபாய் நோட்டுக் கட்டுகளை வைத்திருந்தார். அங்கு வந்த குரங்கு ஒன்று சுற்றுலாப் பயணி, அவர் வைத்திருந்த பையை பறித்துச்சென்றது. மரத்தின் மீது ஏறி அமர்ந்த குரங்கு, பையில் இருந்த 500 ரூபாய் கட்டை எடுத்து கையில் வைத்துக்கொண்டு, ஒவ்வொரு தாளாகப் பிரித்து வீசியது.

Exit mobile version