ரூ.55 லட்சம் மதிப்புள்ளகடத்தல் தங்கம் பறிமுதல்

பெங்களூரு, டிசம்பர் 13-
ஜீன்ஸ் பேன்ட் மற்றும் உள்ளாடைகளில் சட்டவிரோதமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.55 லட்சம் மதிப்புள்ள தங்க பேஸ்ட் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட குற்றவாளியான குடகு பகுதியைச் சேர்ந்த 24 வயது இளைஞரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர் மற்றும் அவரிடமிருந்து 907 கிராம் தங்கப் பசை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவர் கடத்தல் மற்றும் சுங்க வரி ஏய்ப்பு செய்ததற்காக கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட குற்றவாளி டிசம்பர் 10 ஆம் தேதி துபாயில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய போது, ​​நிலைய சுங்க அதிகாரிகள் சோதனையிட்டபோது, ​​சட்டவிரோதமாக கடத்தப்பட்ட தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது.
பயணிகளை பரிசோதிக்கும் போது, ​​அந்த இளைஞன் ஒழுங்கீனமாக நடந்து கொள்ள முயற்சி செய்துள்ளார் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்திய போது அந்த இளைஞன் அணிந்திருந்த கருப்பு ஜீன்ஸை கூர்ந்து கவனித்ததில், இடுப்பு பகுதிக்கு அருகில் தைக்கப்பட்ட தங்க பேஸ்ட் பைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.