ரூ.57 லட்சம் மதிப்புள்ள கடிகாரங்கள் பறிமுதல்

பெங்களூர் : ஜனவரி. 24 – ராஜராஜேஸ்வரி நகரில் போலீஸ் சரகத்தில் ஐவரேகௌடனதொட்டி வீதியில் உள்ள மஹாராஜா பார் அருகில் ஒரு டெம்போவை பின் தொடர்ந்து வந்து பின்னர் அதை தடுத்து நிறுத்தி அதில் இருந்த 57 லட்ச ரூபாய்கள் மதிப்புள்ள 1282 டைட்டான் வாட்சுகளை கொண்ட 23 பெட்டிகளை அபகரித்து கொண்டு தப்பியோடிய குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர். இது குறித்து ஹனுமெகௌடா என்பவர் போலீசில் தெரிவித்த புகாரின்படி கடந்த 15ம் தேதி அன்று நள்ளிரவு 2 மணி அளவில் அசோக் லேலாண்ட் வாகனத்தில் 1282 டைட்டன் வாட்சுகள் அடங்கிய 23 பெட்டிகளை ஏற்றிக்கொண்டு கோலாரிலிருந்து வந்து கொண்டுள்ளார். அந்த நேரத்தில் தன்னுடன் பணியாற்றும் ஜான் மற்றும் பிஸால் கிஷன் ஆகிய இருவர் சிகரெட் வாங்கவென இந்த வாகனத்தை எடுத்துக்கொண்டு நாயாண்டனஹள்ளி சென்று வந்து கொண்டிருந்தபோது ஒரு கார் மற்றும் மூன்று இரு சக்கர வானத்தில் வந்த ஐந்தாறு பேர் வாகனத்தை தடுத்து நிறுத்தி இருவரையும் கீழே இறக்கி வாகனத்துடன் வாட்சுகளை கிடத்தி சென்றுள்ளனர் என தெரிவித்திருந்தார். பின்னர் இந்த புகாரின் மீது தீவிர கவனம் செலுத்தி குற்றவாளிகளை பிடித்க்க தடிப்படை அமைத்த போலீசார் நடவடிக்கையில் இறங்கி குற்றவாளிகள் சமீர் அஹமத் என்ற சையத் ஹுசேன் , என்ற சலீம் பாஷா (28) , சையத் ஷாஹீத் (26 ) ஆகியோரை கைது செய்து இவர்களிடம் செய்த விசாரணையில் ஜான் என்பவனை மிரட்டி வகணத்தி அபகரித்து கொண்டு சென்று வாகனத்தில் இருந்த பொருள்களை எதுத்துக்கொண்டு பின்னர் வாகனத்தை அதே இடத்தில் கொண்டு வைத்து விட்டதாக தெரிவித்துள்ளனர் ,