ரூ. 6 லட்சம் சொத்துக்கு ரூ. 500 கோடி வரி பாக்கி என்று நோட்டீஸ்

பெங்களூரு, ஜன. 2: பெங்களூரில் 6 லட்சம் சொத்து உரிமையாளர்கள் வரி செலுத்தாமல் உள்ளனர். அவர்களிடம் ரூ.500 கோடி பாக்கியை வசூல் செய்யும் நோக்கில் பிபிஎம்பி அவர்கள் அனைவருக்கும் ‘எஸ்எம்எஸ் நோட்டீஸ்’ அனுப்பி வருகிறது.
‘இதுவரை நீங்கள் சொத்து வரி கட்டவில்லை. நிலுவைத் தொகை இருந்தால், பிபிஎம்பி சட்டம்-2020ன் படி நடவடிக்கை எடுக்கப்படும். இந்த சட்டத்தின்படி, சொத்துக்களை பறிமுதல் செய்து விற்கலாம், அசையா சொத்துகளை பறிமுதல் செய்யலாம். அசையாச் சொத்தின் சுமை, துணைப் பதிவாளரால் வழங்கப்பட்ட என்கம்பரன்ஸ் சான்றிதழில் (என்கம்பரன்ஸ் சர்டிபிகேட்) குறிப்பிடப்படலாம். வங்கி கணக்குகளை பறிமுதல் செய்து, பணம் செலுத்தி, கிரிமினல் வழக்குகளை பதிவு செய்யலாம்’ என, ‘எஸ்.எம்.எஸ் நோட்டீஸில்’ தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைன் லிங்க் கொடுக்கப்பட்டு, அதன் மூலம் சொத்து வரி செலுத்த வேண்டும் என்று தெரிவித்து வருகிறது
“பெங்களூரில் ஓராண்டுக்கு மேல் சொத்து வரி செலுத்தாதவர்களுக்கு மூன்று மாதங்களாக எஸ்எம்எஸ் அனுப்பப்படுகிறது. ஆனால், 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இன்னும் சொத்து வரி செலுத்தவில்லை. இதனால், சொத்து உரிமையாளர்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்பப்பட்டு வருகிறது. பிபிஎம்பி சட்டம் 2020ன் படி எப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்பது சொத்து உரிமையாளர்களுக்கு விளக்கப்பட்டுள்ளது” என்று பிபிஎம்பி வருவாய் துறை சிறப்பு ஆணையர் முனிஷ் மவுட்கில் தெரிவித்தார்.
பிபிஎம்பி எல்லைக்கு உட்பட்ட வணிக கட்டடங்களுக்கு பூட்டு போடுவது குறித்து, சில அதிகாரிகள் தவறான தகவல் அளிப்பது எங்களுக்கு தெரிய வந்தது. அத்தகைய அதிகாரி அல்லது ஊழியர்கள் மீது துறை ரீதியான விசாரணை நடத்தி, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
மாநில மற்றும் மத்திய அரசு கட்டிடங்களின் சொத்து வரி நிலுவையில் உள்ளது. இது போன்ற சொத்துகள் அடையாளம் காணப்பட்டு அட்டவணைப்படுத்தப்பட்டது. அதன் உரிமையாளர்கள் வரியையும் செலுத்த தேவையான‌ நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.