
புதுடெல்லி: அக். 25-
தாய்லாந்தில் இருந்து கடந்த திங்கட்கிழமை 2 இந்திய பயணிகள் டெல்லி விமான நிலையம் வந்தனர்.
அவர்களது தனிப்பட்ட உடைமைகள் எக்ஸ்ரே மூலம் ஸ்கேன் செய்யப்பட்டன. இதையடுத்து நடைபெற்ற சோதனையில் 4 பாலிதீன் பைகளில் அவர்கள் 7,213 கிராம் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
சுமார் ரூ.7.21 கோடி மதிப்புடைய அந்த போதைப் பொருளை சுங்கத் துறையினர் பறிமுதல் செய்தனர். இதையடுத்து இரு பயணிகளும் கைது செய்யப்பட்டனர்.















