ரூ.754 கோடி செலவில் 61 கி.மீ நீளத்திற்கு ஒயிட் டாப்பிங் சாலை

பெங்களூரு, டிச. 19: பி.பி.எம்.பியின் கீழ், ரூ.754.74 கோடி செலவில், 61.12 கி.மீ நீளத்திற்கு சாலைகளை, சிமென்ட் சாலைகளாக (ஒயிட் டாப்பிங்) மாற்ற‌ முடிவு செய்யப்பட்டு, விரிவான திட்ட அறிக்கை (டி.பி.ஆர்) தயாரிக்க, டெண்டர் கோரப்பட்டுள்ளது.
19 சட்டசபை தொகுதிகளில் ஒயிட் டாப்பிங் பணிகள் மேற்கொள்ளப்படும். இதற்காக 9 தொகுப்புகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கான ஒப்பந்தப்புள்ளி கடந்த டிசம்பர் 16‍ ஆம் தேதி அறிவிக்கப்பட்டு, 26 ஆம் தேதி ஏலம் சமர்பிக்க கடைசி நாளாகும்.
ரூ. 800 கோடி செலவில் நகரில் சிமென்ட் சாலைகள் அமைக்கப்படும் என்று துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் கூறினார்.
எந்த சட்டமன்ற தொகுதியில் எத்தனை கி.மீ சாலை சிமென்ட் சாலை போடப்பட உள்ளது. என்ற விவரம் கீழே உள்ளது.
சர்வஜ்ஞாநகர், புலிகேசிநகர்: 105.94 கோடி செலவில் 8.7 கி.மீ, சாந்திநகர், சிவாஜிநகர், 105.37 கோடி செலவில் 7.38 கி.மீ நீளம்.
கோவிந்தராஜநகர், விஜயநகர்: 275.25 கோடி செலவில் 6.67 கி.மீ நீளம்.
பேட்டராயனபுரா, எல‌ஹங்கா, மல்லேஸ்வரம்: 277.11 கோடி செலவில் 6.48 கி.மீ நீளம்.
ராஜராஜேஸ்வரி நகர், யஷ்வந்தபுரம், தாசரஹள்ளி: ரூ. 95.44 கோடி செலவில் 7.25 கி.மீ நீளம்.
ஜெயநகர், சிக்பேட்டை, சாமராஜ்பேட்டை: ரூ.286.04 கோடி செலவில் 6.8 கி.மீ நீளம்.காந்திநகர், பிடிஎம் லேஅவுட்: 274.24 கோடி செலவில் 7.44 கி.மீ நீளம்.
கே.ஆர்.புரா: 286.33 கோடி செலவில் 5.5 கி.மீ நீளம்.