
தானே, மார்ச். 18 –
தானேயை சேர்ந்த 42 வயது நபர் ஒருவர், தனக்கு வேலைவாங்கி தருவதாக கூறி கடந்த 2019-ம் ஆண்டு ரூ.10 லட்சத்தை மோசடி செய்ததாக போலீசில் புகார் அளித்து இருந்தார். இந்த புகாரின் படி போலீசார் நடத்திய விசாரணையில், கோலாப்பூரை சேர்ந்த 53 வயது ஆட்டோ டிரைவர் தனக்கு தெரிந்த அதிகாரிகள் இருப்பதாகவும், இதனால் விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்ததை தெரிவித்தார். இதனை நம்பிய அந்த நபர் அவரிடம் பணத்தை கொடுத்து உள்ளார். ஆனால் வேலை வாங்கி தராததால் தனது பணத்தை திருப்பி கேட்டு உள்ளார். இதற்கு ஆட்டோ டிரைவர் ரூ.1 லட்சத்தை மட்டும் திருப்பி செலுத்தினார். மீதி ரூ.9 லட்சத்தை தராமல் மோசடி செய்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை பிடிக்க விசாரணை நடத்தி வருகின்றனர்.