ரெயிலில் கொண்டு வரப்பட்ட ரூ.2 கோடி பறிமுதல்

கார்வார், ஜூன் 9-
ரயிலில் மும்பையிலிருந்து மங்களூருக்கு இரண்டு கோடி ரூபாய் கொண்டுவந்த நபரை, போலீசார் கைது செய்தனர்.
பணத்துக்கான எந்த ஒரு ஆவணமும் அவரிடம் இல்லாததால் அவரை கைது செய்தனர்.
அவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மனோகர் சிங் என்ற சீன் சிங் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் டிக்கெட் வாங்காமல் பயணம் செய்ததால் மனோகர் சிங்கை கார்வார் அருகே ரயில்வே போலீசார் அபராதம் விதித்தனர் .அந்த நிலையில் சந்தேகத்தின்பேரில் ரயில்வே போலீசார் இவரின் பைகளை சோதனை நடத்தினர்.
அப்போது இவரது பையில் நூறு கட்டுகள் கொண்ட இரண்டு கோடி ரூபாய் இருப்பது தெரிந்தது.
மனோகர் சிங் மும்பையின் பாரத் பாய் என்ற பின்டோ என்பவர் இடம் 15 ஆயிரம் ரூபாய்க்கு வேலை பார்த்து வந்துள்ளார். முதலாளியின் பையை மங்களூரில் ராஜு என்பவருக்கு கொடுக்க மும்பையில் இருந்து மங்களூருக்கு வந்ததாக போலீசாரிடம் முதல்கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளார்.ரயில்வே போலீசார் குற்றவாளியை கார்வார் கிராம போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று அங்கு ஒப்படைத்துள்ளனர்.