ரெயிலில் தீ விபத்து

கூடூர்,நவ. 18- அகமதாபாத்தில் இருந்து சென்னை வரக்கூடிய நவஜீவன் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று இரவு புறப்பட்டு வந்தது. ஆந்திர மாநிலம் கூடூர் ரெயில் நிலையம் அருகே இன்று அதிகாலை வந்து கொண்டிருந்தது. ரெயிலில் சமையலறை உள்ள பெட்டியில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. அதிக தீப்பற்றி எரிந்ததால் அந்த பெட்டியில் இருந்து புகைமண்டலம் எழுந்தது. அதன் அருகே உள்ள மற்ற பெட்டிகளுக்கும் புகை பரவியது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் சில பயணிகள் அலறி கூச்சலிட்டனர். இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகளுக்கு பயணிகள் தகவல் தெரிவித்தனர்.