ரெயில்வே திட்டங்களை விரைந்து முடிக்க புதிய குழு

பெங்களூர, நவ.19- கர்நாடக மாநிலத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் ரயில்வே திட்டங்களை விரைந்து செயல்படுத்த ரயில்வே துறை மற்றும் மாநில அரசின் உயர் அதிகாரிகள் கொண்ட குழுவை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசுடன் 50:50 செலவில் பகிர்வு அடிப்படையில் 9 புதிய ரயில்வே திட்டங்கள் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன, இந்த திட்டங்களின் முன்னேற்றத்தை முதல்வர் பசவராஜ பொம்மை மற்றும் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
பின்னர் பேசிய முதல்வர் பசவராஜ பொம்மை, திட்டங்களை குறிப்பிட்ட காலத்திற்குள் விரைந்து முடிக்க, சிறந்த ஒருங்கிணைப்பு மற்றும் சிக்கல்களை நீக்கும் நோக்கத்தில் அதிகாரிகள் குழு அமைக்கப்படும் என்றார். ரயில்வே திட்டங்களுக்கு தேவையான நிலம் கையகப்படுத்துவதற்கு முதல் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும், அதிக தேவையுள்ள, விரைவாக முடிக்கக்கூடிய திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து நிலம் கையகப்படுத்த வேண்டும் என்றும் முதல்வர் உத்தரவிட்டார்.
9 ரயில்வே திட்டங்களுக்கு மொத்தம் 15 ஆயிரம் ஏக்கர் நிலம் தேவை, அதில் இதுவரை 9000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணி முடிந்துள்ளது. 6000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.