ரெயில் பெயர் மாற்றம்

ஆமதாபாத், ஜன. 4-
குஜராத் மாநிலத்தில் சுவாமிநாராயண் சன்ஸ்தா அமைப்பின் ஆன்மிக குருவாக விளங்கியவர் பிரமுக் சுவாமி மகராஜ். இவரின் ஒரு மாத கால, நூற்றாண்டு விழாவை பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் 14-ந் தேதி தொடங்கிவைத்தார்.அப்போது அவர், ‘பிரமுக் சுவாமி மகராஜின் நினைவாக, ஆமதாபாத்-டெல்லி இடையே இயக்கப்படும் சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் ரெயில், அக் ஷர்தாம் எக்ஸ்பிரஸ் ரெயில் என பெயர்மாற்றம் செய்யப்படும்’ என்று கூறினார்.