ரேணுகாச்சாரியார் தம்பி மகன் மர்ம சாவு – குருஜியிடம் விசாரணை

பெங்களூர்: நவம்பர். 7 – எம் எல் ஏ ரேணுகாச்சார்யாவின் தம்பி மகன் சந்திரசேகர் சந்தேகத்திற்கிடமான வகையில் இறந்துள்ள விவகாரம் தொடர்பாக வினய் குருஜியை சந்தித்த சன்னகிரி போலீசார் அவரிடம் மிக தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். சிக்கமகளூரு மாவட்டத்தின் கொப்பா தாலுகாவை சேர்ந்த கௌரிகத்தே ஆசிரமத்திற்கு நேற்று மாலை போலீசார் வந்து சந்துரு இந்த ஆஸ்ரமத்திற்கு வந்து சந்தித்தது குறித்து நள்ளிரவு வரை விசாரணைகள் நடத்தியுள்ளனர். இறந்து போன சந்துரு எந்த விஷயமாக உங்களிடம் பேசினார் , இந்தசந்திப்பின் போது ஏதாவது குற்றங்குறைகளை உங்களிடம் பகிர்ந்து கொண்டாரா , சந்துரு , கிரண் மற்றும் உங்களுக்கிடையில் ஏதாவது பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளதா என வினய் குருஜியிடம் போலீசார் கேள்விகள் கேட்டு துளைத்துள்ளனர். சந்துரு இந்த ஆஸ்ரமத்தின் தீவிர பக்தன். வழக்கம் போல் இந்த முறையும் ஆஸ்ரமத்திற்கு வந்து போயுள்ளான். அவன் மிக தாமதமாக வந்ததால் அவனிடம் நாங்கள் எதுவும் விவரமாக பேச வில்லை. . தவிர அவன் மிகவும் தாமதமாக வந்ததால் இங்கு வர இது சரியான நேரமா என கேட்டேன் . தவிர உடனே செல்லுங்கள் மற்றும் ஜாக்கிரதையுடன் செல்லுங்கள் எனவும் அறிவுறுத்தி இருவரையும் அனுப்பிவைத்தேன் . அதன் பின்னர் நடந்த சம்பவங்கள் குறித்து எனக்கும் மிகவும் வருத்தமாக உள்ளது என குருஜி தெரிவித்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன . இதற்கிடையில் சந்துரு சாவிற்கு உண்மையான காரணம் வெளிவர வாய்ப்புள்ளதாக தெரிகிறது. ஏற்கெனவே இது கொலையல்ல ; விபத்தால் ஏற்பட்டுள்ள சாவு என போலீசார் மற்றும் எப் எஸ் எல் துறை ஆய்வின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அத்துடன் ரேணுகாச்சார்யா குடும்பத்தார் இது ஒரு திட்டமிட்ட கொலை என குற்றஞ்சாட்டி வருவது பல சந்தேகங்களுக்கு இடமளித்துள்ளது. இன்று சந்துருவின் பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் தடவியல் துரையின் முதல் அறிக்கை போலிஸாருக்கு கிடைக்க உள்ள வாய்ப்புகள் உள்ளன.