ரேணுகாச்சார்யாவின் தம்பி மகன் பிணமாக கண்டெடுப்பு

பெங்களூர் : நவம்பர் : 3 – காணாமல் போயிருந்த ஹொன்னாலி எம் எல் ஏ ரேணுகாச்சார்யாவின் தம்பி மகன் சந்திரசேகர் பிணமாக கண்டெடுக்கப்பட்டுளார் . சந்திரசேகர் துங்கா அணைக்கட்டின் அருகில் கண்டெடுக்கப்பட்ட காரில் தற்கொலை செய்துகொண்டிருக்கக்கூடும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது . சந்திரசேகரின் கார் துங்கா பிரதான கால்வாயில் விழுந்துள்ளது.

இந்த காரை தீயணைப்பு ஊழியர்கள் மேலே எடுத்தபோது அதில் எம் எல் ஏ சகோதரரின் மகன் சந்திரசேகரின் உடல் கிடைத்துள்ளது. எம் எல் ஏ ரேணுகாச்சார்யாவின் தம்பி மகன் சந்திரசேகர் காணாமல் போன விவகாரம் தொடர்பாக போலீசார் நடவடிக்கை மேற்கொண்ட போது துங்கா அணைக்கட்டின் பிரதான கால்வாயில் சந்திரசேகரின் வெள்ளை நிற கார் கண்டெடுக்கப்பட்டது . தாவணகெரே மாவட்டத்தின் ஹொன்னாலி தாலூகாவின் கடதகட்டே கிராமத்தின் துங்கா அணைக்கட்டு கால்வாயில் சந்திரசேகரின் கார் விழுந்திருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் போலீசார் சம்பவ இடத்தை பரிசீலனை செய்து க்ரேன் வாயிலாக காரை மேலே எடுத்துள்ளனர். பின்னர் காருக்குள் சந்திரசேகரின் இறந்து போன உடல் இருந்துள்ளது. சந்திரசேகரின் கிரேட்டா கார் சூரடூரு அருகில் உள்ள துங்கபத்திரா கால்வாயில் கிடைத்துள்ளது . ஹொன்னாலி மற்றும் ஞாமதி மார்க்கத்திற்கு இடையில் உள்ள கால்வாயில் கண்டெடுக்கப்பட்ட கார் பின்னர் மேலே எடுக்கப்பட்டுள்ளது. அந்த காருக்குள்ளேயே சந்திரசேகரின் உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.