ரேவண்ணாவின் நெருங்கிய நண்பர் படுகொலை

ஹாசன், ஆக.9- கிரானைட் வியாபாரியும், ஒப்பந்ததாரரும், முன்னாள் அமைச்சர் எச்.டி.ரேவண்ணாவின் நெருங்கிய கிருஷ்ண கவுடா (55 கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார்.) நகரின் தொழில் வளர்ச்சி மையம் அருகே மர்ம கும்பல் இவரை கொன்றுவிட்டு தப்பி சென்றது.
கிருஷ்ண கவுடா தனது இன்னோவா காரை நிறுத்திவிட்டு கிரானைட் யூனிட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது, காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் சினிமாவில் வருவது போல் வித் அறிவால் கத்தி உள்ளிட்டவைகளை எடுத்து அவரை கொடூரமாக படுகொலை செய்துள்ளது. இவரது நடமாட்டத்தை காலை முதலே கண்காணித்து வந்த மர்ம கும்ப கும்பல் இந்த படு பாதக செயலில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. கொலையாளிகள் கூலிப்படையினராக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்